பிரதமர் உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்து சபாநாயகரிடம் நாட்டை ஒப்படைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என சுயேட்சை கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 9ஆம் திகதி சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சித் தலைவர்கள், பிரதமர் பதவி விலக வேண்டாம் என ஏகமனதாகக் கோரிய நிலையில், நாட்டில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், வன்முறையை நோக்கி நிலைமை உருவாகி வருவதை அவதானிக்கக் கூடியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, பிரதமர் அலுவலகமும் செயற்பாட்டாளர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுயேட்சைக் கட்சிகள் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.