தமிழக பத்திரப்பதிவு துறையில் 100 நாட்களில் ரூ.4,988 கோடி வருவாய்: கடந்தாண்டை விட இரு மடங்கு உயர்ந்து சாதனை

சென்னை: தமிழகத்தில் 100 நாட்களில் ரூ.4,988.18 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது.

மாநில சொந்த வரி வருவாயில் பெரும்பங்கை வகிப்பது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறைகளாகும். இதில் பதிவுத் துறையில், கணினிமயமாக்கம் அதிகரித்ததன் காரணமாக, பதிவு எண்ணிக் கையும் உயர்ந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்கள் பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்தப்படுவதாலும், பழைய ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதாலும், வில்லங்கச் சான்று, பத்திர நகல்பெறுவது உள்ளிட்டவை எளிமைப் படுத்தப்பட்டுள்ளன.

இதனால் பதிவுத்துறை வருவாய் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுதவிர, சமீபத்தில் தத்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஏப்.1-ம் தேதி முதல் ஜூலை 12-ம் தேதி வரையிலான 103 நாட்களில் பத்திரப்பதிவுத் துறையின் வருவாய் ரூ.4,998.18கோடியாக பதிவாகி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கடந்த 2021-ல் இதே காலகட்டத்தில் ரூ.2,577.43 கோடியாக வருவாய்இருந்தது. இந்தாண்டு அதைவிடகூடுதலாக ரூ.2,410.75 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த 2021-22-ம் ஆண்டுக்கு வருவாய் இலக்காக ரூ.13,252.56 கோடி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.13,913.65 கோடி வருவாய் ஈட்டியது. இது, பத்திரப்பதிவு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாகும்.

தற்போது, ஏப்.1 முதல் ஜூலை 12வரையிலான 103 நாட்களிலேயே ரூ.5 ஆயிரம் கோடி வருவாயை எட்டியுள்ளதால், இந்தாண்டு இலக்கைத் தாண்டி வருவாய் உயரும் என்று பதிவுத் துறையினர் தெரி வித்துள்ளன

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.