வட இந்திய பாடகரால் வைரமுத்துவுக்கு வந்த சோதனை பெரியம்மா பெண்ணை ரசிக்கலாமா..! கதவைதட்டி தடுத்து நிறுத்திய சம்பவம்

வட மொழி பாடகர்கள் மொழிதெரியாமல், தமிழ் பாடல்களை பாடும் போது, தவறான உச்சரிப்பால் தமிழ் கலாச்சாரத்தை சிதைக்கும் வகையில் நடந்து கொள்வதாக  கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவின் பிறந்தநாளை யொட்டி கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தமிழ் மொழி தெரியாத வட இந்திய பாடகர்கள் தமிழ் பாடல்களை பாடும் போது தமிழ் உச்சரிப்புகளை தவறாக பாடி தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் சம்பவங்கள் அதிகம் நடப்பதாகவும், ஒருமுறை தேவா இசையமைப்பில், பாடல் ஒன்றை எழுதிய போது, பிரியாமான பெண்ணை ரசிக்கலாம் என்று எழுதி இருந்ததாகவும், அந்த பாடகரோ பெரியம்மா பெண்ணை ரசிக்கலாம் என்று பாடியதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஒலிப்பதிவுகூட கதவை தட்டி திறந்து சென்று அந்த தவறை திருத்தியதாக வைரமுத்து தெரிவித்தார்

அந்த பாடகர் உதித் நாராயணன், என்றும் மனதில் கள்ளம் கபடம் இல்லாத பாடகர் என்றும் பாவம் அவருக்கு மொழி தெரியாததால் இந்த தவறு நடக்க இருந்ததாக வைரமுத்து சுட்டிக்காட்டினார்

வைரமுத்து சொன்ன அந்த பாடல் இடம் பெற்ற படம் பிரசாந்த் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான கண்ணெதிரே தோன்றினாள். வைரமுத்து குறிப்பிட்டபடி சரியான தமிழ் உச்சரிப்புடன் அந்த பாடல் படத்தில் இடம் பெற்றது குறிப்பிடதக்கது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.