திருமணமாகாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் செலிபிரிட்டிகளா?

இந்தியாவில் ஒரு காலத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்திருந்த நிலையில் தற்போது திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் திருமணமாகாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு செலிபிரிட்டிகள் தான் காரணம் என்று கூறப்பட்டாலும் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் ஆகியவையும் காரணமாக கூறப்படுகிறது.

திருமணமாகாத இளைஞர்கள்

இந்தியாவில் திருமணமாகாத இளைஞர்களின் சதவீதம் அதிகரித்து வருவதாக புள்ளியல் துறை அமைச்சகத்தின் அறிக்கை காட்டுகிறது. ஆண்கள், பெண்கள் என இரு பாலர்களும் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது.

திருமணமாகாத ஆண்களின் சதவிகிதம்

திருமணமாகாத ஆண்களின் சதவிகிதம்

2014ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட தேசிய இளைஞர் கொள்கையில் 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட நபர்களை “இளைஞர்கள்” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருமணமாகாத இளைஞர்களின் (15-29 வயது) சதவீதம் ஆண்கள் 2011ஆம் ஆண்டில் 20.8 சதவீதம் என இருந்த நிலையில் அது 2019ஆம் ஆண்டு 26.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பெண்களின் திருமணமாகாத சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

புள்ளிவிபரம்
 

புள்ளிவிபரம்

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (NSO) சமூக புள்ளியியல் பிரிவால் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் இருந்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளை பயன்படுத்தி அறிக்கை தயாரிக்கப்பட்டது. இந்த அறிக்கையில் பல ஆச்சரியமான அதே நேரத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் உள்ளன.

எந்த மாநிலங்களில் அதிகம்?

எந்த மாநிலங்களில் அதிகம்?

இந்த அறிக்கையின்படி 2019 ஆம் ஆண்டில், ஜம்மு & காஷ்மீர், உத்தரப் பிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் திருமணம் செய்து கொள்ளாத இளைஞர்களின் சதவிகிதம் அதிகம் காணப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் திருமணமாகாத இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பிரபலங்கள் காரணமா?

பிரபலங்கள் காரணமா?

திருமணமாகாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட போதிலும் பிரபலங்களும் ஒரு காரணம் என கூறப்பட்டிருப்பது ஆச்சரியமான ஒன்றாகும். ஒரு சில பிரபலங்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ள போவதிவில்லை என்று கூறுவதை இளைஞர்கள் பின்பற்றி வருகிறார்கள் என்றும் தங்களுடைய விருப்பமான நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் போலவே தாங்களும் இருக்க வேண்டுமென்று அவர்கள் மனதில் ஒரு ஆழமான கருத்து தோன்றுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. நடுத்தர மற்றும் சிறிய நகரங்களில் தான் பிரபலங்களின் தாக்கம் காரணமாக இளைஞர்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறுவதாக புள்ளியியல் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் விகிதம்

ஆண் பெண் விகிதம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் (1,000 ஆண்களுக்கு பெண்கள்) 991 ஆக இருந்ததாக தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அது 1020 ஆக உயர்ந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

சரியான வாழ்க்கைத்துணை

சரியான வாழ்க்கைத்துணை

இளைஞர்கள் மற்றும் பெண்கள் தங்களுக்கு சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் திருமணம் தாமதமாவதாக கருத்து கூறியுள்ளனர்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

அதேபோல் பொருளாதார சிக்கலும் திருமணத்தை தள்ளி வைத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் இரு தரப்பினரும் பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கொள்கை முடிவை எடுத்திருப்பதால் திருமணம் தாமதமாகி வருவதாக பலர் கூறுகின்றனர். ஒரு நல்ல வேலை அல்லது ஒரு சுய தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறி செட்டிலாகிவிட்ட பின்னர் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பல இளைஞர்களின் மத்தியில் உள்ளது என்றும் புள்ளிவிவர ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர்களின் மக்கள் தொகை குறையுமா?

இளைஞர்களின் மக்கள் தொகை குறையுமா?

2011ஆம் ஆண்டு இந்தியாவின் மக்கள்தொகை 1211 மில்லியனை தாண்டிய நிலையில் 2021ஆம் ஆண்டு அது 1363 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடு ஆகும். இந்திய மக்கள்தொகையில் 27.3 சதவீதம் பேர் 15-29 வயதுடைய இளைஞர்கள் ஆவார்கள். ஆனால் திருமணம் தாமதம் ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.

இளைஞர்களின் எண்ணிக்கை

இளைஞர்களின் எண்ணிக்கை

2036ஆம் ஆண்டின் காலகட்டத்தின் இளைஞர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த இளைஞர்களின் எண்ணிக்கை 1991ஆம் ஆண்டு 222.7 மில்லியன் ஆகவும், 2011ஆம் ஆண்டு 333.4 மில்லியன் என இருந்த நிலையில் தற்போது 371.4 மில்லியனை எட்டியுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2036ஆம் ஆண்டு இளைஞர்களின் எண்ணிக்கை 345.5 மில்லியனாகக் குறையும் என்றும் அறிக்கை கூறுகிறது.

இந்தியா இளைஞர்களின் நாடு

இந்தியா இளைஞர்களின் நாடு

இருப்பினும் இன்று வரை இந்தியா இளைஞர்களின் நாடாகவே தொடர்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய தகவல் ஆகும். உலகின் இளைஞர் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு இந்தியாவில் உள்ளனர். இளைஞர்களின் மக்கள்தொகை அதிகரித்தால் இந்திய பொருளாதாரமும் அதிகரிக்கும் என்றும், நாட்டின் லட்சிய இலக்கை அடைவதில் இளைஞர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

இளைஞர்களின் எண்ணிக்கை நாட்டில் மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இளைஞர்களான வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழிலுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சினிமா, அரசியல் பிரபலங்கள் தாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை பொருட்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியா என்றென்றும் இளமை நாடாகவே இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Number of youths not married on rise, lifestyle and influence of celebrities is reason?

Number of youths not married on rise, lifestyle and influence of celebrities is reason? | திருமணமாகாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: காரணம் செலிபிரிட்டிகளா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.