உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களின் ஆடம்பரமான வீடுகள் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
ஆனால் தற்போது நாம் பார்க்கும் வீடுகள் என்பது பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும் என்பதும் இந்த வீடுகளை பெரும் கோடீஸ்வரர்கள் கூட வாங்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது
முத்தான இந்த 3 பங்குகளை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் காணலாம்!
இந்த வீடுகளில் ஒருவேளை நீங்கள் வாசிக்க விரும்பினால் நீங்கள் அந்த நாடுகளின் பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பெருமை வாய்ந்த வீடுகள் குறித்து தற்போது பார்ப்போம்
10. குயின்டா டி ஒலிவோஸ், அர்ஜென்டினா
அர்ஜென்டினாவின் தற்போதைய ஜனாதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அவர்கள் வசிக்கும் இந்த இல்லம் 1854ஆம் ஆண்டு கட்டப்பட்டது. குயின்டா டி ஒலிவோஸ் சுமார் 8,093 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த வரலாற்று கட்டிடத்தின் மதிப்பு ரூ.185 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. வெள்ளை மாளிகை, அமெரிக்கா
1792ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இதில் 132 அறைகள், 35 குளியலறைகள் மற்றும் 3 லிஃப்ட்கள் உள்ளன. சுமார் 5,110 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.300 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
8. Moncloa அரண்மனை, ஸ்பெயின்
மாட்ரிட்டின் யுனிவர்சிட்டி சிட்டி வார்டில் அமைந்துள்ள ஸ்பெயினின் மாங்க்லோவா அரண்மனை 1947ஆம் ஆண்டு கட்டப்பட்டது, இது நாட்டின் தற்போதைய பிரதமரான பெட்ரோ சான்செஸின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். சுமார் 32,664 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.1,200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
7. ராஷ்டிரபதி பவன், இந்தியா
இந்தியாவின் ராஷ்டிரபதி பவன் தற்போதைய இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது இந்தியாவின் புதுடெல்லியின் ராஜ்பாத்தில் அமைந்துள்ளது. இது 1912-1929ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. ராஷ்டிரபதி பவனில் சுமார் 200,000 சதுர மீட்டர் பரப்பளவில் 340 அறைகள் கொண்ட நான்கு தளங்கள் உள்ளன மற்றும் இந்த வரலாற்று கட்டிடத்தின் மதிப்பு ரூ.4,300 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
6. ஜனாதிபதி வளாகம், துருக்கி
நாட்டின் தலைநகரின் பெஸ்டெப் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி வளாகம் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனின் உத்தியோகபூர்வ இல்லமாகும். இந்த இல்லத்தில் குறைந்தது 1,150 அறைகள் கொண்டுள்ளது என்றும், சுமார் 300,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும், இந்த வீட்டின் மதிப்பு 5,400 கோடி ரூபாய்க்கு மேல் எனவும் கூறப்படுகிறது.
5. காண்டேய், ஜப்பான்
1999 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சோரி டெய்ஜின் காண்டே என்றும் அழைக்கப்படும் காண்டேய், தற்போதைய ஜப்பானிய பிரதமர் யோஷிட் சுகாவின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். இது டோக்கியோவின் சியோடா-கு, 2-3-1 நாகாடா-சோவில் அமைந்துள்ளது. 46,823 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வீட்டின் மதிப்பு ரூ.5,800 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
4. குய்ரினல் பேலஸ், ரோம்
1583ஆம் ஆண்டு கட்டப்பட்ட குய்ரினல் அரண்மனை இத்தாலிய ஜனாதிபதியின் மூன்று உத்தியோகபூர்வ இல்லங்களில் ஒன்றாகும். தற்போதைய இத்தாலிய அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லாவின் இந்த வீடு சுமார் 110,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வீட்டின் மதிப்பு ரூ.9,700 கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.
3. கிரெம்ளின், ரஷ்யா
1482-1495ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீடு மற்றும் ரஷ்ய அரசாங்கத்தின் நிர்வாக மையம் 275,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த வீட்டின் மதிப்பு 10,000 கோடிக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2. சியோங் வா டே, தென் கொரியா
1989-1991ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட, சியோங் வா டே, தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் உத்தியோகபூர்வ இல்லம். இந்த இல்லம் நீல ஓடுகள் அல்லது நீல வீடுகளின் பெவிலியன் என்றும் அழைக்கப்படுகிறது. இது சுமார் 250,000 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த அழகான வீட்டின் மதிப்பு ரூ.11,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
1. Zhongnanhai, சீனா
பெய்ஜிங்கின் இம்பீரியல் சிட்டியில் 1421ஆம் ஆண்டு கட்டப்பட்ட Zhongnanhai, சீனப் பிரதமர் ஜி ஜின்பிங்கின் வசிப்பிடமாக உள்ள்து. 3,439,830 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள ஜோங்னன்ஹாய் மதிப்பு 3,00,000 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Expensive houses of World Leaders and the price on them!
Expensive houses of World Leaders and the price on them! | இந்த வீட்டின் மதிப்பு 3 லட்சம் கோடி ரூபாய்.. யாருடையது தெரியுமா..?