விற்பனையை தொடங்கிய 108MP கேமரா கொண்ட Infinix Note 12 Pro 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்!

Infinix Note 12 Pro 5G Flipkart Sale: இன்பினிக்ஸ் நிறுவனம் கடந்த வாரத்தில் இன்பினிக்ஸ் நோட் 12, நோட் 12 ப்ரோ 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை இந்திய டெக் சந்தையில் அறிமுகம் செய்தது. இதில் பல சிறப்பம்சங்கள் அடங்கிய, மிகவும் சக்திவாய்ந்த இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி போனின் விற்பனை தொடங்கியுள்ளது.

புதிய இன்பினிக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில், அமோலெட் டிஸ்ப்ளே, மீடியாடெக் புராசஸர், 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளது. இத்தனை சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி சலுகைகள் (Infinix Note 12 Pro 5G Offer Sale)

இந்த ஸ்மார்ட்போனுக்கு கூடுதலாக வங்கி சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போனை நல்ல விலையில் வாங்க முடியும். இன்பினிக்ஸ் 5ஜி போனானது ஒரே ஒரு மாறுபாட்டில் விற்பனைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பகம் உள்ளது.

அறிமுக சலுகையாக இந்த போனின் விலை ரூ.17,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயனர்களுக்கு கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடி கிடைக்கிறது. இதனால், இந்த போனை வெறும் ரூ.16,499-க்கு வாங்கலாம். இந்த போன் கருப்பு, வெள்ளை என இரண்டு வண்ணங்களில் வருகிறது.

இன்பினிக்ஸ் நோட் 12 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள் (Infinix Note 12 Pro 5G Specifications)

இன்பினிக்ஸ் 5ஜி போனில், 1080 × 2400 பிக்சல்கள் கொண்ட 6.7 இன்ச் முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே உள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதள அடிப்படையிலான ஸ்கின் இதில் நிறுவப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனை திறன்பட இயக்க 6nm மீடியாடெக் டிமென்சிட்டி 810 5ஜி (MediaTek Dimensity 810 5G) சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8GB ரேம், 128GB சேமிப்புடன் இன்பினிக்ஸ் போன் உள்ளது. இந்த போனில் டைனமிக் ரேம் வசதியும் உள்ளது. இதன் உதவியுடன் 13ஜிபி வரை ரேம் மெமரியை நீட்டிக்க முடியும்.

மொபைலின் பின்பக்கம், குவாட் எல்இடி ப்ளாஷ் கொண்ட டிரிபிள் கேமரா அடங்கிய அமைப்புள்ளது. அதில் 108 மெகாபிக்சல் முதன்மை சென்சாரும், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாரும், 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளன.

முன்பக்கத்தில் இரட்டை எல்இடி ப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. போனை சக்தியூட்ட 5000mAh பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் 30 நிமிடங்களில் Infinix Note 12 Pro 5G போனை முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.