மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றும் வகையில் அதிநவீன ஸ்டார் ஷிப் எனப்படும் விண்கலத்தை தயாரித்து வருகிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த நிலையில், இந்த விண்கலத்துக்கான பூஸ்டர் பரிசோதனையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் பூஸ்டர் 7 பரிசோதனை நடைபெற்றது. அப்போது, திடீரென அடிப்பாகத்தில் இருந்து புகை கிளம்பியது. சற்று நேரத்தில் பலத்த சத்தத்துடன் பூஸ்டர் வெடித்துச் சிதறியது.
கடந்த ஆண்டுகளில் பூஸ்டர் மாதிரிகளை அந்நிறுவனம் பரிசோதித்து வந்தது. இதுவரையில் 4 முறை இந்த பூஸ்டர் மாதிரிகள் விபத்தை சந்தித்திருக்கின்றன. இந்த ஆண்டு ஸ்டார் ஷிப் பணிகள் முடிவடையும் என எலான் தெரிவித்திருந்த நிலையில், இன்று பூஸ்டர் 7 மாதிரி வெடித்துச் சிதறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் அவை சரிசெய்யப்படும் எனவும் ஸ்பேஸ் எக்ஸ் தெரிவித்திருக்கிறது.
எலான் மஸ்க்கின் ஸ்டார் ஷிப் பூஸ்டர் மாதிரி பரிசோதனையின் போது வெடித்துச் சிதறிய வீடியோ உலக அளவில் வைரலாக பரவி வருகிறது.
Holy moly. Well, that was unexpected!https://t.co/dUUqw7ojRv pic.twitter.com/7IGztPuE12
— Chris Bergin – NSF (@NASASpaceflight) July 11, 2022