பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்… ஆனால், இங்கே 20 நொடிகளில் பாம்பைக் கண்டுபிடிக்க சவால்!

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுதுபோக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இதனால், இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நெட்டிசன்கள் வெறித்தனமாகப் பார்த்து வருகிறார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில், ஒரு மாதிரியாகவும், இரண்டாவது பார்வையில் குழப்பமானதாகவும் இருக்கும். இறுதியில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்.

அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒட்டகச்சிவிங்கிகள் நிறைந்துள்ள இந்த கார்ட்டூனில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. ஒட்டகச்சிங்கி போலவே இருக்கும் அந்த பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இங்கே உங்களுக்கு 20 நொடிகளில் பாம்பைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் சவால். பலரும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பெயர்பெற்ற பிரபல ஹங்கேரி ஓவியர் ஜெர்ஜ்லி டுடால்ஃப்தான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ஒட்டகச்சிவிங்கிகளை சித்திரங்களாக சித்தரித்துள்ளார். ஆனால், அவைகளுக்கு இடையே, ஒரு பாம்பை ஒட்டகச்சிவிங்கி தோலைப் போலவே வரைந்து மறைத்து வைத்துள்ளார். இதனால், ஓட்டகச் சிவிங்கிகளுக்கு இடையே மறைந்துள்ள பாம்பை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பது சவாலானதாக இருக்கிறது. நீங்கள் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 20 நொடிகளில் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டால், உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு இந்த படத்தில் வலது பக்கத்தில் இருக்கிறது. இப்போது நன்றக படத்தைப் பாருங்கள் பாம்பைக் கண்டுபிடியுங்கள்.

பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று இதோ வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள். நிறைய ஆப்படிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.