வீட்டு கடனை கட்ட முடியாது.. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!

உலகின் மிகப்பெரிய உற்பத்தி நாடான சீனா-வில் மக்கள் வீட்டுக் கடனுக்கான ஈஎம்ஐ தொகையைச் செலுத்த முடியாது எனக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனா ஏற்கனவே கொரோனா, உற்பத்தி சரிவு, விநியோகம் பாதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் மோசமான பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது ரியல் எஸ்டேட் என்ற மோசமான பாதிப்பு சீனாவை சூழ்ந்துள்ளது.

எல்லாம் தலைகீழாய் மாறிப்போச்சு.. சீனா வேண்டாம் என ஒதுக்கியவர்கள் செய்த வேலையை பாருங்க?

ரியல் எஸ்டேட் துறை

ரியல் எஸ்டேட் துறை

சீன ரியல் எஸ்டேட் துறை கடந்த ஒரு வருடமாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்டு வருகிறது. எவர்கிராண்டே நிறுவனத்தின் தோல்வியில் இருந்து சீன அரசு மற்றும் தனியார் வங்கிகளில் போதுமான கடன்களை ரியல் எஸ்டேட் துறைக்கு அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் ஒருகாலத்தில் சீனா பொருளாதாரத்திற்கு முக்கிய வர்த்தகத் துறையாக விளங்கிய கட்டுமான துறை தற்ரபோது மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

 சீன மக்கள்

சீன மக்கள்

இந்நிலையில் பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்த சீன மக்கள், கட்டி முடிக்கப்படாத அதாவது கட்டிக்கொண்டு இருக்கக் கூடிய கட்டுமான திட்டங்களுக்காக வாங்கிய கடனுக்கு ஈஎம்ஐ செலுத்த முடியாது என அறிவித்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட்-ம் வங்கிகளும் செய்வது அறியாது நிற்கிறது..

 100க்கும் அதிகமான திட்டங்கள்
 

100க்கும் அதிகமான திட்டங்கள்

சீன மக்களுக்கு ரியல் எஸ்டேட் துறை மீதான நம்பிக்கை குறைவதைத் தாண்டி அச்சம் அதிகரித்துள்ளது. இதனால் 50க்கும் அதிகமான நகரங்களைச் சேர்ந்த 100க்கும் அதிகமாகக் கட்டி முடிக்கப்படாத திட்டங்களுக்குக் கடனுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாது என மக்கள் அறிவித்துள்ளதாகச் சீன ரியல் எஸ்டேட் இன்பர்மேஷன் கார்ப் அறிவித்துள்ளது.

 தொடர்ந்து வளர்ச்சி

தொடர்ந்து வளர்ச்சி

திங்கட்கிழமை இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொண்டு இருக்கும் நிறுவனங்கள் எண்ணிக்கை 28 ஆக இருந்தது, செவ்வாய்க்கிழமை 58 ஆகவும், புதன் கிழமை 100 ஆகவும் உயர்ந்துள்ளது என ஜெப்ரீஸ் நிறுவனத்தின் சந்தை ஆய்வாளர் சுஜின் சென் தெரிவித்துள்ளார்.

சங்கிலி உடைந்தது

சங்கிலி உடைந்தது

சீன மக்கள் வீட்டுக்கடனுக்கான பணத்தைச் செலுத்தினால் தான் வங்கிகளிடம் இருந்து கட்டுமானத்திற்கான பணத்தை ரயில் எஸ்டேட் நிறுவனங்கள் பெறும். தற்போது இந்தச் சங்கிலி உடைந்துள்ளதால், கட்டிக்கொண்டு இருக்கும் திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடையும்.

58 பில்லியன் டாலராக

58 பில்லியன் டாலராக

சீனாவின் மொத்த கடனில் வெறும் 1 சதவீத கடன் அளவு இந்த 100 திட்டங்களாக இருந்தால் சீனாவின் வாராக் கடன் 58 பில்லியன் டாலராக உயரும். இது கட்டாயம் சீன சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China Real Estate facing big trouble; homebuyers are refusing to pay mortgages

China Real Estate facing big trouble; homebuyers are refusing to pay mortgages வீட்டுக் கடனை கட்ட முடியாது.. என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ..!

Story first published: Thursday, July 14, 2022, 17:29 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.