ஓமன் கடற்கரையில் கடல் அலைகளால் 8 இந்தியர்கள் அடித்துச் செல்லப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அடித்து செல்லப்பட்டவர்களில் இருவர் உயிரிழந்தனர் மற்றும் 3 பேரைக் காணவில்லைஎன தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் தற்போது துபாயில் வசித்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 42 வயதான ஷஷிகாந்த் மமானே, அவரது மனைவி மற்றும் அவர்களது குழந்தைகளான ஸ்ருதி (9) மற்றும் ஸ்ரேயாஸ் (6) ஆகியோர் சலா அல்-முக்சைல் கடற்கரையில் தங்கள் நேரத்தைக் கழித்தபோது இந்த சம்பவம் நடந்தது.
8 பேரில், விழுந்த மூவர் சிறிது நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்டனர், அவர்களுக்கு அவசர சிகிச்சை உடனடியாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, செவ்வாயன்று ஒரு குழந்தை உட்பட குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இறந்து கிடந்ததாக அல் அரேபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பயங்கரமான விபத்தின் வீடியோ காட்சிகள் ட்விட்டரில் வைரலாகிவருகிறது.
Part-2 pic.twitter.com/O9fDXy6Uum
— tengsrangchi msangma TBS (@TengsrangchiM) July 13, 2022
அவர்கள் கடற்கரையின் விளிம்பில் நின்றுகொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த நிலையி, ஒரு பெரிய மற்றும் வலுவான அலை அவர்களைத் தாக்கியது.
அலைகள் மீண்டும் கடலுக்குள் இழுக்கப்படும்போது, ஒரு பெண் மற்ற இரண்டு உறுப்பினர்கள் கடற்கரை நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அங்கு அருகில் இருந்தவர்களாலும் எந் உதவியும் செய்யமுடியவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் இறப்புகள் அல்லது விபத்துகளைத் தவிர்க்க பல சுற்றுலாத் தளங்களை மூடுவதாக ஜூலை 10 அன்று CDAA அறிவித்தது.
Watch: A family is swept away by a giant wave on #Oman‘s Mughsail beach after eight members reportedly crossed the beach’s boundary fence.https://t.co/2KHqOMobdD pic.twitter.com/w2auuYfUku
— Al Arabiya English (@AlArabiya_Eng) July 12, 2022