கவர்னரின் 'நீட்' மர்மம்-கனிமொழி வருத்தம் – ஹீரோ 'லெஜண்ட்' சரவணன்- சரத் பேட்டி|விகடன் ஹைலைட்ஸ்

ஆர்டிஐ மனுக்கு மழுப்பலான பதில்: ‘நீட்’ மசோதா இன்னும் கவர்னரிடம்தான் உள்ளதா?

தமிழக ஆளுநர் ரவி

‘நீட்’ விலக்கு மசோதா தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை அளித்த மழுப்பலான பதிலால், அந்த மசோதா உண்மையிலேயே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விட்டதா அல்லது இன்னும் கவர்னரிடம்தான் இருக்கிறதா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

2021 ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்விலிருந்து விலக்கு. தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதா தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தமிழக அரசுக்கே மீண்டும் அனுப்பி வைத்தார்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையானது. ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. முதல்வர் மு.க. ஸ்டாலின் ஓரிரு முறை கவர்னரை நேரில் சந்தித்தும், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இருந்தார். ஆனால், 142 நாட்களுக்குப் பிறகு, கவர்னர் அந்த மசோதாவில் விளக்கம் கேட்டு, அதைத் திருப்பி அனுப்பினார். தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக கவர்னருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனாலும் ஆளுநர், தொடர்ந்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் விடுதலை கோரும் மனு தொடர்பான வழக்கில், கவர்னரின் அதிகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி, கடுமையான கருத்துகளைத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில்தான், ஒருவழியாக நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாக ஆளுநரின் செயலாளர் தெரிவித்ததாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனால், இந்த மசோதா விஷயத்தில் அடுத்து முடிவெடுக்க வேண்டியது ஜனாதிபதிதான் என்பதால், எல்லோரது கவனமும் அவரது முடிவை எதிர்நோக்கி இருந்தது. ஆனால், ஜனாதிபதியிடமிருந்தும் இது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், நீட் விலக்கு மசோதாவின் நிலை தொடர்பான தகவலை அளிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார்.

இதற்கு கடந்த ஜூலை 11-ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலில், “மசோதா, உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனையில் உள்ளது. அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது. அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்தே ஆளுநர் மாளிகை மழுப்பலான பதில் அளித்திருப்பதாகவும், நேரடியான பதில் இல்லாததைப் பார்க்கும்போது, அந்த மசோதா உண்மையிலேயே ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு விட்டதா அல்லது இன்னும் கவர்னரிம்தான் இருக்கிறதா என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுனர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல.

நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுனர் மாளிகை தெரிவித்ததாக மே 4ஆம் தேதி முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுனர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுனர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் சட்டசபைத் தலைவர் அப்பாவு. அப்போது அவரிடம் இது குறித்து கேட்டபோது, “ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிறைய மசோதாக்கள் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. இரண்டாவது முறையாக அனுப்பிவைக்கப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று சேர்ந்துவிட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

சட்டமன்ற மரபுபடி, சட்டப்பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டுவரப்படும் தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது குடியரசுத் தலைவருக்கோ, உள்துறைக்கோ, மத்திய அரசுக்கோ அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்காமல் இருப்பது மக்களை புறக்கணிக்கும் செயல். காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை புறக்கணிப்பதால் ஏற்படுகிற அவமானம் சட்டமன்றத்திற்கு அல்ல, மக்கள் மன்றத்துக்குத்தான்” என்று ஆவேசமாக கூறினார்.

புதிய கல்விக்கொள்கை, சனாதானத்து ஆதரவான கருத்து, பல்கலைக்கழக நியமனங்களில் மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து பா.ஜ.க-வுக்கான அஜெண்டாவை செயல்படுத்தும் விதமாக செயல்படுகிறார் என தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், தி.மு.க. அரசுக்கு அடுத்த குடைச்சலைக் கொடுப்பதற்கான விஷயம் ஒன்று கவர்னரிடம் சிக்கி உள்ளது. அதுதான் மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரம். இது தொடர்பாக தற்போதைய உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது புகார் தெரிவித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதன் பின்னணி குறித்த தகவலைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…

கழுகார் அப்டேட்ஸ்: கனிமொழி வருத்தம்  முதல் செந்தில் பாலாஜியின் ‘டார்கெட்’ வரை

கனிமொழி, செந்தில் பாலாஜி

அண்ணாமலையின் டார்ச்சர்…

செந்தில் பாலாஜியின் டார்கெட்!

‘மகாராஷ்டிராபோல தமிழ்நாட்டிலும் ஓர் ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார்’ என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சொன்னதிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கடும் அப்செட். ‘ஒருவேளை அது உண்மையாக இருக்குமோ?!’ என்று செந்தில் பாலாஜியையும், பிற தி.மு.க எம்.எல்.ஏ-க்களையும் கண்காணித்து அறிக்கை அளிக்குமாறு முதல்வர் அலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு பிரச்னை சீரியஸாகியிருக்கிறது. இந்தச் சந்தேகத்தை உடைத்து, தன்னை ‘ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாகக்’ காட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார் பாலாஜி.

இது தவிர, ஸ்டாலின்மீது கனிமொழி வருத்தம் ஏன், பூமராங் ஆன புகாரால் புலம்பும் ஆஸ்டின், ஆ‌.ராசா மீது கூடலூர் மக்கள் கொந்தளிப்பது ஏன் என்பது உள்பட கழுகார் தரும் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்களைப் படிக்க க்ளிக் செய்க…

நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள்… பட்டியல் வெளியீடு! 

நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை18 ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டிருக்கிறது.

ஊழல், சர்வாதிகாரி, கிரிமினல் என நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்தைகளாக என்னென்ன வார்த்தைகள் பட்டியலிடப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க….

பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்… தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றம்!

Sexual Harassment (Representational Image)

தாய்லாந்து நாட்டில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு கைதாகி சிறையில் இருந்தவர்கள், விடுதலைக்குப் பிறகு மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. 2013-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை சிறைகளில் இருந்து விடுதலையான 16,000 பாலியல் குற்றவாளிகளில் 4,848 பேர், மீண்டும் அத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக, அந்த நாட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் என்ற அதிரடியான முடிவை மேற்கொண்டு தாய்லாந்தில் மசோதா நிறைவேற்றப்ப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…

‘தி லெஜண்ட்’ படத்தோடு வரும் ஹீரோ சரவணன்…

தி லெஜண்ட்’ படத்தில்…

‘ஹாய்… மீட் பண்ணி நாளாச்சில்ல?’ அழுத்தமாகக் கைகுலுக்குகிறார்கள் டைரக்டர்கள் ஜேடி – ஜெர்ரி. சினிமா, விளம்பரம் என எப்போதும் நீரோட்டத்தில் இருக்கிற இரட்டையர். சற்று இளைப்பாறலுக்குப் பிறகு ‘தி லெஜண்ட்’ படத்தோடு வந்திருக்கிறார்கள்.

“கால இடைவெளி ஒண்ணும் பெருசா கிடையாது. அனுதினமும் சினிமாவைக் கவனிச்சுக்கிட்டே அதுக்குள்ளேதான் இருந்திருக்கோம். இன்னமும் நாங்க சினிமா ரசிகர்கள்தான். ஜனங்க மாறியிருக்காங்களா? ரசனை எப்படியிருக்கு? ஒரு படத்தை ஏத்துக்கிற வேகம் எந்த விதத்தில் இருக்கு? எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டே இருக்கோம். அப்படி நல்ல உழைப்பைக் கொடுத்த படம் தான் ‘தி லெஜண்ட்.’ நல்ல பொழுபோக்கு அம்சங்கள் நிறைஞ்ச படம். எந்த முன்தயாரிப்பும் எண்ணமும் இல்லாமல் வந்தால், சந்தோஷமா ரசிச்சிட்டுப் போகலாம். மிகச் சாதாரணமான மனிதன் தன் புத்திசாலித்தனத்தாலும், உழைப்பாலும் எப்படி முன்னேறித் தடைகள் பல கடந்து, பெரிய லெஜண்டாக உருவாகிறான் என்பதுதான் ஒன்லைன். இதனோட விரிவுதான் படம். கலகலன்னு ஒரு சினிமா. படம் பார்த்தால் சும்மா திருவிழா பார்த்த மாதிரி சந்தோஷமா இருக்கணும். அப்படி வந்திருக்கு படம்’’ நிதானமாகத் தொடர்கிறார்கள் இரட்டையர்.

விளம்பரங்களில் பார்த்த லெஜண்ட் சரவணன் சினிமாவில் எப்படி வந்திருக்கார், அவரை ஹீரோவாக்க முடியும் என்கிற நம்பிக்கை எப்படி வந்தது, சரவணன் தொடர்ந்து நடிப்பாரா..? என்பது உட்பட ஜேடி – ஜெர்ரி பகிரும் மேலும் பல நிறைய சுவாரஸ்யங்களைப் படிக்க க்ளிக் செய்க…

ஜெயலலிதாவைத் தாக்கி சரத்குமார் கொடுத்த பேட்டி!#AppExclusive

Sartath Kumar Start New Party – 1996

ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர் என்று பலராலும் நினைக்கப்பட்ட சரத்குமார், முதன் முறையாக ஜூனியர் விகடனில் அவரைத் தாக்கி கொடுத்த பரபரப்புப் பேட்டிக்குப் பிறகு முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார்.

“ஜெயலலிதாவை எதிர்க்கத் தொடங்கிய பிறகு இந்த அரசு உங்களுக்குத் தொல்லைகள் கொடுக்கிறதா?”

“நிறைய. என்னுடைய லேட்டஸ்ட் படமான ‘மகா பிரபு’-வை வாங்கக் கூடாது என்று விநியோகஸ்தர்களுக்கு மிரட்டல்கள். திரையரங்க உரிமையாளர்களுக்கும் மறைமுக அச்சுறுத்தல்கள்! ‘மகா பிரபு’ ரிலீஸாகுமா என்ற நிலைகூட இருந்தது. தமிழகம் முழுவதும் ‘மகாபிரபு’ பட போஸ்டர்கள் ஆளுங்கட்சியினரால் கிழிக்கப்படுகின்றன. சேலம், தர்மபுரி மாவட்ட வெற்றி விழாவில் நான் கலந்து கொண்டதால், அந்த மாவட்ட கலெக்டர் விழாவுக்குப் போகக்கூடாது என்ற உத்தரவு. இப்படி எதிர்ப்புகள். என்னை மிகவும் பாதித்த விஷயம் – சரத்குமார் என்று பெயர் எழுதிப் போகும் ஆட்டோக்கள் போலீஸாரால் மடக்கப்படுகின்றன. எல்லா ‘ரெக்கார்டுகளும்’ சரியாக இருந்தும், அவர்களின் மீது பொய் கேஸ் போடுகிறார்கள். ஏன் என்று கேட்டால் ‘சரத்குமார் பெயரைப் போட்டால் இதுதான் கதி’ என்று மிரட்டுகிறார்கள். இதுதான் ஜனநாயகமா? இது என் மனதை மிகவும் புன்படுத்துகிறது. இவற்றையெல்லாம் மீறித்தான் அரசியல் நடத்த வேண்டுமென்றால் நான் ரெடி சார்! என் ரசிகர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள் தினமும் வருகின்றன அவர்களைப் பொறுமையுடன் இருக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறேன்..” என்று ஜூ.வி-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறுகிறார் சரத்.

1996 ல் கட்சி ஆரம்பிக்கும்போது சரத்குமார் அளித்த பரபரப்பான பேட்டியை முழுமையாக படிக்க க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.