உங்க கையில் இருக்கும் ரூ.500 நோட்டு நல்ல நோட்டா..கள்ள நோட்டா.. எப்படி தெரிந்து கொள்வது?

உங்கள் கையில் இருக்கும் 500 ரூபாய் நோட்டுகள் உண்மையான நோட்டுகளா? அல்லது போலியானவையா? எப்படி கண்டுபிடிப்பது?

போலி நோட்டுகளின் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து நாம் எப்படி பாதுகாப்பாகாக இருப்பது?

மொத்தத்தில் உங்கள் கையில் இருக்கும் நோட்டு உண்மையானதா இல்லையா? கள்ள நோட்டா எப்படி கண்டுபிடிப்பது? ரிசர்வ் வங்கியின் வழிமுறைகள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

புள்ளி கோலத்தில் மாதம் ரூ.75,000 வருமானம்.. அசத்தும் ஸ்ரீரங்கம் தீபிகா.. எப்படி தெரியுமா..?

என்னென்ன அம்சங்கள்?

என்னென்ன அம்சங்கள்?

தேவ நாகரி எழுத்தில் 500 என்று எழுதப்பட்டு இருப்பதை பார்க்கலாம்.

காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுனரின் கையெழுத்து ஆகியவை இடம் பெற்றிருக்கும். அவற்றை தடவி பார்த்தால் உணரும் வகையில் இருக்கும்.

அதோடு காந்தியின் உருவப்படம் வலது பக்க மையத்தில் இருக்கும்.

500 ரூபாய் நோட்டினை மடித்தால் அது பச்சை நிறத்தில் இருந்து இன்டிகோ கலராக மாறும்.

எழுத்துக்கள் எப்படியிருக்கும்?

எழுத்துக்கள் எப்படியிருக்கும்?

இதேபோல 500 ரூபாய் என்று எழுத்தால் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களும் பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.

ரூபாய் தாளின் வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் 500 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கும்.

ரூபாய் தாளின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு
 

தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு

ரூபாயின் சீரியல் நம்பர், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவைகள் சரியாக குறிப்பிட்டிருக்கும். இவற்றை சரி பார்க்கலாம்.

புதியதாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் குறியீடு மற்றும் பிரச்சார வாக்கியம் குறிப்பிட்டிருக்கும். ஆக அதனையும் கூட செக் செய்து கோள்ளலாம்.

வாட்டர் மார்க்

வாட்டர் மார்க்

மேலும் ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 500 ரூபாய் என்று இருக்கும். இதனை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளிபுகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டின் வலது கீழ் பகுதியில் எண்கள் இருக்கும். இது சிறியதில் இருந்து பெரியதாக செல்லும்.

அதே போல மையப்பகுதியில் உள்ள மகாத்மா காந்தியின் படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துகளில் ஆர்பிஐ மற்றும் 500 போன்றவை உள்ளன.

மகாத்மா காந்தியின் புகைப்படம் மற்றும் 500 என்பது வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.

கண் பார்வையற்றோர் தெரிந்து கொள்ள?

கண் பார்வையற்றோர் தெரிந்து கொள்ள?

கண் பார்வை திறன் குறைவாக இருப்பவர்களுக்கு ஏற்ப, ரூபாய் நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஐந்து கோடுகளும், வலது புறத்தில் கிடைமட்ட செவ்வகமாக 500 ரூபாய் எனவும் இருக்கும்.

இந்த நோட்டின் அளவு 66mm *150 mm – ல் இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fake or Real: Is the Rs.500 note in your hand a good note? fake note?

Fake or Real: Is the Rs.500 note in your hand a good note? fake note?/உங்க கையில் இருக்கும் ரூ.500 நோட்டு நல்ல நோட்டா..கள்ள நோட்டா.. எப்படி தெரிந்து கொள்வது?

Story first published: Thursday, July 14, 2022, 19:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.