Nothing Phone Issue: நத்திங் போனில் இப்படி ஒரு சிக்கலா? பரிதவிக்கும் வாடிக்கையாளர்!

Nothing Phone 1 Offers: நத்திங் போன் 1 அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பிருந்தே, இந்த போன் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகமாக இணையத்தில் தென்பட்டது. அதுபோலவே, இந்த ஸ்மார்ட்போன் விலை, அம்சங்களை தெரிந்து கொள்வதற்கும் பயனர்கள் ஆவலாக இருந்தனர்.

இந்நிலையில் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறந்த விலை, நல்ல கேமரா, அதிரடி அம்சங்கள் என போன் அனைத்திலுமே டாப்பாக இருந்தது. எனினும், போனை ஒரு நாளேனும் பயன்படுத்தினால் தான், அதன் தரம் குறித்து தெரியவரும் என்பது டெக்கிகளின் நம்பிக்கை.

நத்திங் போன் (1) சிக்கல் – Nothing Phone (1) Issue

ஆனால் போனை வாங்கிய ஒரே நாளில், ஒரு பயனர் போனுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளார். ட்விட்டரில் NileshAbhang2 என்பவர் தான் புகைப்படத்துடன் போனுக்கு எதிராக பதிவிட்டுள்ளது. IP53 மதிப்பீடு இருந்தபோதிலும், நத்திங் போன் (1) கேமரா அமைப்பு ஈரப்பதத்தை ஈர்த்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாருக்குப் பிறகு, பயனர்கள் நிறுவனத்திடம் உதவி கோரியுள்ளனர். இந்த நேரத்தில், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கார்ல்பெய் பெயரையும் சேர்த்து ட்வீட்டில் குறியிட்டுள்ளனர். இந்த ட்வீட்டை இதுவரை 700க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

இதே பயனர் மற்றொரு ட்வீட்டில், தான் வெளியிட்ட புகைப்படம் மழை அல்லது ஏசி சூழலில் எடுக்கப்படவில்லை என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும், கேமரா அமைப்பில் ஈரப்பதம் வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது பதிவில், போனின் கேமரா வேலை செய்வதாகவும், ஆனால், ஒன்றுமே தெரியவில்லை என்று வருந்தியுள்ளார். எல்லாம் மங்கலாகத் தெரிகிறது என்று தனது துயரத்தை குறிப்பிட்ட வாடிக்கையாளரிடத்தில், Flipkart சேவை மையத்திடம் தொடர்பு கொண்டு மொபைலை மாற்ற ஒரு பயனர் பரிந்துரைத்தார்.

ஆனால், பயனர் நத்திங் போன் (1)-ஐ மாற்றுவதற்கு பதில் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் இதுவரை அவரது கோரிக்கைக்கு யாரும் செவி சாய்க்கவில்லை என்று கூறப்படுகிறது.

டியர் நத்திங் ஹேஷ்டேக் போராட்டம்

போன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தென்னிந்திய டெக் யூடியூபர்களுக்கு இந்த போன் மதிப்பாய்வுக்காக வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. இதை
#DearNothing என்ற ஹேஷ்டேகுடன் யூடியூபர்கள் டிரெண்டாக்கினர்
.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நத்திங் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “நாங்கள் ஒரு புதிய நிறுவனம். யாரையும் நிராகரிக்கவில்லை. அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும். அதுவரை பொறுத்திருக்க வேண்டும். உங்கள் நிறை குறைகளை ஏற்று மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்” என்று கூறியுள்ளது.

இச்சூழலில், அந்த நிறுவனத்தின் போன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து நிறுவனம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த போனின் ஆரம்ப விலை ரூ.29,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜூலை 21 முதல் இந்த போன் மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.