பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் நேற்று (13) இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலால் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலினால் இராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாகவும், அவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லவாய பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
தாக்குதலின் போது இராணுவ வீரரிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி மற்றும் 60 ரவைகள் அடங்கிய 02 தோட்டாக்களை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றுள்ளமை குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ,பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிகளை கண்டுபிடிப்பதற்கான மேலதிக விசாரணைகள் வெலிக்கட மற்றும் பொரளை பொலிஸாரினால் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.