வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதிபடுத்தப்பட்டதை அடுத்து அமமாநிலத்திற்கு மத்திய சுகாதாரத்துறை சார்பில் குழு ஒன்று விரைந்துள்ளது.
கேரளாவில் ‘ஜூனோசிஸ்’ எனப்படும் விலங்குகளில் மனிதனுக்கு பரவும் தொற்று நோயான குரங்கு காய்ச்சல் அறிகுறி ஒருவருக்கு கண்டறியப்பட்டதையடுத்த அங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளதாவது:உலகளவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சந்தேகத்திற்கு உரிய நபர்களை உடனே கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்களையும் தீவிர பரிசோதனை செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் போதிய வசதிகள், தேவையான மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவிற்கு விரைகிறது மத்திய குழு
கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதியாகி உள்ள நிலையில் அம்மாநில சுகாதாரத்துறைக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்றை அனுப்பி வைக்க உள்ளது. இதனிடையே மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதலை வழங்கும் என தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement