இ. போ. டிப்போ மூலமாக மட்டக்களப்பு விவசாயிகளுக்கு மீண்டும் எரிபொருள்

மாவட்ட செயலகத்தின் தலையீட்டினால் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலமாக விவசாயிகளுக்கு  எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வவுணதீவு விவசாயிகள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, மாவட்ட செயலகத்தின் தலையீட்டினால் இலங்கை போக்குவரத்து சபை டிப்போ மூலமாக விவசாயிகளுக்கு  எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக வவுணதீவு பகுதியில் வேளாண்மை மேற்கொள்ளப்பட்டது. மண்டபத்தடி மற்றும் ஆயித்தியமலை ஆகிய பகுதிகளில் அறுவடையை மேற்கொள்வதற்குத் தேவையான டீசல் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ,இன்றைய தினம், தமக்கான டீசல் தருவதாக கூறியும் தமக்கான டீசலை வழங்காமல் ஏனையவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குறித்த இடத்திற்கு வருகை தந்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத் மற்றும் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர் ஆகியோருடன் விவசாய பிரதிநிதிகள் அழைக்கப்பட்டு கலந்துரையாடியதன் பின்னர் 6300 லீற்றம் டீசலினை கமநல திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நாளை வழங்கப்படுமென வாக்குறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.

விவசாயிகளுக்காக 6300 லீற்றர் டீசலினை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டமையினை முன்னிட்டு மாவட்ட செயலகத்திற்கும்இ மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டோருக்கு மாவட்ட விவசாயிகள் இதன்போது நன்றி தெரிவித்தனர்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.