எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேரை அதிமுகவிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், செங்கோட்டையன், சி.வி. சண்முகம் ஆகியோரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்
மேலும் ஓ.எஸ் மணியன், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி, கோகுல இந்திரா ஆதிராஜாராம், தி.நகர் சத்யா ஆகியோரையும் நீக்குவதாக அறிவித்துள்ளார். வேளச்சேரி அசோக், விருகை ரவி, ஜக்கையன், ராஜன் செல்லப்பா, தி.நகர் சத்யா, கே.பி.கந்தன், இளங்கோவன் ஆகியோரையும் நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக 22 பேரை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார். அதிமுக லெட்டர் பேடில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டு இந்த நீக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. முன்னதாக ஓ. பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் உட்பட 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM