மோடி அரசுக்கு புதிய சவால்.. திரும்பும் பக்கம் எல்லாம் பாதிப்பு..!

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை ஜூன் 2022 இல் வரலாறு காணாத வகையில் 26.1 பில்லியன் டாலராக உயர்ந்ததுள்ளது. இது ஜூன் 2021 ஐ விட 172 சதவீதம் அதிகமாகும்.

எரிசக்தி மற்றும் உலோக இறக்குமதிகளின் விலைகளை அதிகமாக இருந்த காரணத்தால் வர்த்தகப் பற்றாக்குறை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

மத்திய அரசு இந்த ஜூன் மாதம் 25.6 பில்லியன் டாலர் அளவில் வர்த்தகப் பற்றாக்குறை பதிவு செய்யும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது 26.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கமல் கட்டிப்புடி வைத்தியம் பிஸ்னஸ் ஆகவே மாறிடுச்சு.. அன்றே கணித்தார் உலக நாயகன்..!

மோடி அரசு

மோடி அரசு

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை, நுகர்வோர் சந்தை மதிப்பு அப்படித் திரும்பும் பக்கமெல்லாம் பாதிப்பு இருக்கும் வேளையில் மோடி அரசுக்கு வர்த்தகப் பற்றாக்குறை என்ற புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.

வர்த்தகப் பற்றாக்குறை

வர்த்தகப் பற்றாக்குறை

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஜூலை 14 வெளியிட்ட தரவுகள் படி, ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 23.5 சதவீதம் அதிகரித்து 40.13 பில்லியன் டாலராகவும், இறக்குமதி 57.5 சதவீதம் அதிகரித்து 66.31 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை யாரும் எதிர்பார்க்காத வகையில் 26.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

ஏற்றுமதி
 

ஏற்றுமதி

இந்தியாவின் மொத்த ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள வித்தியாசம் தான் இந்த வர்த்தகப் பற்றாக்குறை. இது அதிகரிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறும் என்பதால் மத்திய அரசுக்கு வர்த்தகப் பற்றாக்குறை புதிய தலைவலியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் உயர்வு

தொடர் உயர்வு

கடந்த சில மாதங்களாக மாதாந்திர வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் 20.4 பில்லியன் டாலரிலிருந்து மே மாதத்தில் 23.3 பில்லியன் டாலராக உயர்ந்தது, இதைத் தொடர்ந்து தற்போது ஜூன் மாதம் 26.1 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதிகள் ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட இருமடங்காகி 21.3 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 10.6 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. இந்தியாவின் இறக்குமதி செலவில் பெரும் பகுதி பெட்ரோலியம் பொருட்களைச் சார்ந்துள்ளது.

நிலக்கரி

நிலக்கரி

இதேபோல் நிலக்கரி, கோக் மற்றும் ப்ரிக்வெட்டுகளின் இறக்குமதி மதிப்பு கடந்த ஆண்டை காட்டிலும் 260 சதவீதம் உயர்ந்து ஜூன் மாதத்தில் 6.47 பில்லியன் டாலர் அளவீட்டை எட்டியது. ஜூன் 2021 இல், இதன் இறக்குமதிகள் ஆண்டுக்கு 1.8 பில்லியன் டாலர்களாக இருந்தது.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்

ஜூன் மாதத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மூன்றாவது பெரிய இறக்குமதி பிரிவாக இருப்பது மட்டும் அல்லாமல் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 26.8 சதவீத வருடாந்திர உயர்வைப் பதிவு செய்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இறக்குமதிகள் ஜூன் 2021ல் 4.6 பில்லியன் டாலரில் இருந்து 6.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

தங்கம்

தங்கம்

இந்தியாவிற்கான மற்றொரு முக்கியச் செலவான தங்கம், இறக்குமதி 182 சதவீதம் அதிகரித்துள்ளது. மஞ்சள் உலோகத்தின் இறக்குமதி ஜூன் மாதத்தில் 2.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் 969 மில்லியன் டாலராக இருந்தது.

சித்ரா ராமகிருஷ்ணா தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு வழக்கு.. டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Trade deficit might biggest problem for Modi Govt; Trade deficit rises to record $26.1 billion June

Trade deficit might be biggest problem for Modi Govt; Trade deficit rises to record $26.1 billion in June மோடி அரசுக்கு புதிய சவால்.. திரும்பும் பக்கம் எல்லாம் பாதிப்பு..!

Story first published: Thursday, July 14, 2022, 21:02 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.