ஏர்டெல்லுக்கு க்ரீன் சிக்னல்.. ஏர்டெல் – கூகுள் முதலீடு விரைவில் முடிவடையலாம்..

தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் கடுமையான போட்டிக்கு மத்தியில், பல்வேறு சவால்கள் நிலவி வருகின்றன. குறிப்பாக நிதி திரட்டல், கட்டண அதிகரிப்பு, அரசின் ஒத்துழப்பு என பல காரணிகளுக்கு மத்தியில் ஓரளவுக்கு தற்போது தான் மீண்டு வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் 5ஜி சேவை குறித்தான பேச்சு வார்த்தை எழுந்துள்ளது. இது தொலைத் தொடர்பு துறையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் ஒரு வழியாக உள்ளது.

உங்க கையில் இருக்கும் ரூ.500 நோட்டு நல்ல நோட்டா..கள்ள நோட்டா.. எப்படி தெரிந்து கொள்வது?

நிதி திரட்டும் முயற்சி

நிதி திரட்டும் முயற்சி

பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றன. இந்த போட்டிகளை சமாளிக்க நிறுவனங்கள் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றன, அந்த வகையில் பார்தி ஏர்டெல் (Bharti airtel) நிறுவனமும் கடும் சவாலான நிலைக்கு மத்தியில், நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக கூகுள் நிறுவனத்துடனான பேச்சு வார்த்தை இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.

சிசிஐ அனுமதி

சிசிஐ அனுமதி

இம்மாத தொடக்கத்தில் தான் கூகுள் – ஏர்டெல் முதலீட்க்கு இந்திய போட்டி ஆணையம் (CCI)யிடம் அனுமதி அளித்துள்ளது.

கூகுள் நிறுவனம், டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் அதன் டிஜிட்டல் கட்டமைப்பினை மேம்படுத்த 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் கூகுள் நிறுவனம் 300 மில்லியன் டாலர் அளவிலான தொகையைப் பல வருட வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக அளிக்க உள்ளது. இதே 700 மில்லியன் டாலர்களை ஈக்விட்டி முதலீடு மூலம் முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

என்ன திட்டம்?
 

என்ன திட்டம்?

பார்தி ஏர்டெல் – கூகுள் கூட்டணி மூலம் இந்தியாவில் மலிவு விலையில் ஸ்மார்ட்போன் அறிமுகம், 5ஜி சேவை, இதர டெலிகாம் சேவைகளை வழங்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவில் கிளவுட் சேவையை மேம்படுத்துவதிலும் ஏர்டெல், கூகுள் இணைந்து செயல்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் முடியலாம்

விரைவில் முடியலாம்

ஏர்டெல், கூகுள் ஒப்பந்தம் விரைவிம் வெற்றிகரமாக முடிவடையலாம் என்றும், 1 பில்லியன் டாலர் முதலீடு செய்வதன் மூலம், ஏர்டெல்லில் 1.2% பங்கினை கூகுள் வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கூகுள் நிறுவனம் கடந்த ஜூலை 2020ல் ஜியோவில் 4.5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 7.73% பங்கினை ஜியோ நிறுவனத்தில் கையகப்படுத்துள்ளது. தற்போது ஏற்டெல்லிலும் கணிசமான பங்கினை வாங்கவுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Airtel Google Investment May Be Done Soon

Airtel Google Investment May Be Done Soon/ஏர்டெல்லுக்கு க்ரீன் சிக்னல்.. விரைவில் ஏர்டெல் – கூகுள் முதலீடு விரைவில் முடிவடையலாம்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.