ஜூலை 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவை செயலகம், லோக் சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாததாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களை பட்டியலிட்டு புதிய கையேட்டை தொகுத்துள்ளது.
இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, ‘ஜும்லாஜீவி’, ‘பால் புத்தி’, ‘கொரோனா பரவுபவர்’, ‘Snoopgate’ (உளவாளி), ‘அராஜகவாதி’, ‘சகுனி’, ‘சர்வாதிகாரம்’, ‘டனாஷாஹி டனாஷாஹி’ (சர்வாதிகாரம், சர்வாதிகாரம்), ‘வினாஷ் புருஷ்’ (அழிவுகரமான ஆள்), ‘காலிஸ்தானி’ போன்ற வார்த்தைகளை விவாதங்களின் போது அல்லது இரு அவைகளிலும் பயன்படுத்தப்பட்டால் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த இந்தப் பட்டியலை சாடியுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ஒரு ட்வீட்டில், “பிரதமர் அரசாங்கத்தை நடத்துவதைத் துல்லியமாக விவரிக்க விவாதங்கள் மற்றும் உரையாடல்களின்போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பேசுவதற்குத் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளுக்கான வரையறையாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தணிக்கை உத்தரவு
“இப்போது, வெட்கக்கேடானது, துஷ்பிரயோகம், காட்டிக்கொடுப்பவர். ஊழல், கபட நாடகம், திறமையற்றவர் போன்ற அடிப்படை வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது… நான் இந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன். என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள். ஜனநாயகத்துக்காகப் போராடுகிறோம்” என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அரசியலமைப்பு பிரிவு 105(2) “எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதன் எந்தவொரு குழுவிலோ அவர் கூறியதற்கு அல்லது எந்தவொரு வாக்கெடுப்பிற்கும் எந்த நீதிமன்றத்திலும் எந்த நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்” என்று கூறுகிறது. சபைக்குள் என்ன வேண்டுமானாலும் சொல்ல சுதந்திரம் இல்லை என்று கூறுகிறது.
எம்.பி.க்களின் பேச்சை சரிபார்ப்பது
ஒரு எம்.பி என்ன பேசினாலும் அது பாராளுமன்ற விதிகளின் ஒழுக்கம், உறுப்பினர்களின் நல்ல உணர்வு மற்றும் சபாநாயகரின் நடவடிக்கைகளின் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உட்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் எம்.பி.க்கள் சபைக்குள் அவதூறான அல்லது அநாகரீகமான அல்லது கண்ணியமற்ற அல்லது நாடாளுமன்றத்திர்கு விரோதமான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.
மக்களவை பணிகள் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 380 (நீக்கம்) பற்றி கூறுகிறது: “அவதூறான அல்லது அநாகரீகமான அல்லது நாடாளுமன்றத்திற்கு விரோதமான அல்லது கண்ணியமற்ற வார்த்தைகள் விவாதத்தில் பயன்படுத்தப்பட்டதாக சபாநாயகர் கருதினால், சபாநாயகர், சபை நடவடிக்கைகளில் இருந்து அத்தகைய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற விருப்புரிமை உத்தரவைப் பிரயோகிக்கலாம்” என்று கூறுகிறது.
விதி 381 கூறுகிறது: “அவ்வாறு நீக்கப்பட்ட வார்த்தைகள் சபை நடவடிக்கைகளின் பகுதியில் நட்சத்திரக் குறியீடுகளால் குறிக்கப்படும் மற்றும் ஒரு விளக்க அடிக்குறிப்பு நடவடிக்கைகளில் தலைவர் உத்தரவின் பேரில் பின்வருமாறு சேரக்கப்படும்” என்று கூறுகிறது.
நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாத வெளிப்பாடுகள்
ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. தலைமை அதிகாரிகளான மக்களவை சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் – இந்த மோசமான வார்த்தைகளை நாடாளுமன்றத்தின் பதிவுகளில் இருந்து விலக்கி வைக்கும் பணியாக உள்ளது.
அவர்களின் குறிப்பு மற்றும் உதவிக்காக, லோக்சபா செயலகம், ‘நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாத வெளிப்பாடுகள்’ என்ற தலைப்பில் ஒரு கண்டிப்பான தொனியைக் கொண்டு வந்துள்ளது.
இந்த பட்டியலில் பல வார்த்தைகளும் பல வெளிப்பாடுகளும் உள்ளன. அவை பெரும்பாலான கலாச்சாரங்களில் முரட்டுத்தனமாகவும் அல்லது புண்படுத்தும் விதமானதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த பட்டியல், மிகவும் பாதிப்பில்லாத அல்லது தீங்கற்றதாக கருதப்படும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது.
மாநில சட்டமன்றங்களும் முக்கியமாக அதே புத்தகத்தால் வழிநடத்தப்படுகின்றன. இது இந்தியாவின் சட்டப்பேரவைகள், மற்றும் சட்டமன்ற கவுன்சில்களில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களிலிருந்து பெரிதும் பெறப்பட்டுள்ளது.
இந்த புத்தகம் முதன்முதலில் 1999 இல் தொகுக்கப்பட்டது. அந்த நேரத்தில், சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டமன்றம், இந்திய அரசியலமைப்பு சபை, தற்காலிக நாடாளுமன்றம், முதல் பத்தாவது மக்களவை மற்றும் ராஜ்யசபா, மாநில சட்டமன்றங்கள் மற்றும் இங்கிலாந்து போன்ற காமன்வெல்த் நாடாளுமன்றங்கள், ஆகியவற்றால் நாடளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என அறிவிக்கப்பட்ட விவாதங்கள் மற்றும் சொற்றொடர்களில் இருந்து குறிப்புகள் எடுக்கப்பட்டது என்று மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.சி. மல்ஹோத்ரா 2012 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறியிருந்தார்.
900 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் 2004 ஆம் ஆண்டு பதிப்பின் ஆசிரியர் குழுவின் தலைவராக மல்ஹோத்ரா இருந்தார். “தலைமை அதிகாரிகளின் தீர்ப்புகளைப் பொறுத்து, புதிய வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் சீரான இடைவெளியில் பட்டியலில் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன” என்று மல்ஹோத்ரா அந்த நேரத்தில் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளுக்கான எடுத்துக்காட்டுகள்
நாடாளுமன்றத்திற்கு புறம்பாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களில் ‘ரத்தக்களறி’, ‘ரத்தவெறி’ ‘காட்டிக்கொடுத்தல்’, ‘வெட்கக்கேடு’, ‘துஷ்பிரயோகம்’, ‘ஏமாற்றப்பட்ட’, ‘குழந்தைத்தனம்’, ‘ஊழல்’, ‘கோழை’, ‘குற்றம்’, ‘முதலைக் கண்ணீர்’ ஆகிய வார்த்தைகள் அடங்கியுள்ளன.
(அவமானம்)’, ‘கழுதை’, ‘நாடகம்’, ‘கண் துடைப்பு’, ‘புகை மூட்டம்’, ‘போக்கிரித்தனம்’, ‘கபடநாடகம்’, ‘திறமையற்ற’, ‘தவறாக வழிநடத்துதல்’, ‘பொய்’ மற்றும் ‘உண்மை இல்லை’ போன்ற வார்த்தைகள் இனி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்படும்.
நாடாளுமன்றத்திற்குப் புறம்பானதாக பட்டியலிடப்பட்டுள்ள சில ஹிந்தி வார்த்தைகள், ‘கட்டார்’ (துரோகி), ‘சம்சா’, ‘சம்சகிரி’, ‘செலாஸ்’, ‘கிர்கிட்’, ‘குண்டாஸ்’, ‘காடியாலி’ ‘அன்சு’, ‘அப்மான்’, ‘அசத்யா’, ‘அஹங்கார்’, ‘ஊழல்’, ‘கலா தின்’, ‘கலா பஜாரி’ மற்றும் ‘கரீத் ஃபரோக்த்’ ஆகிய இந்திய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
இவை மட்டுமல்லாமல், ‘ஜூம்லஜீவி’, ‘பால் புத்தி’, ‘டங்கா’, ‘தலால்’, ‘தாதகிரி’, ‘டோஹ்ரா சரித்ரா’ (இரட்டை வேடம்), ‘பெச்சாரா’ (பிரயோஜனம் இல்லாதது), ‘பாப்கட்’, ‘லாலிபாப்’, ‘விஸ்வாஸ்காட்’, ‘சம்வேதன்ஹீன்’, ‘ஃபூலிஷ்’ (முட்டாள்தனம்), ‘பித்து’, ‘பெஹ்ரி சர்க்கார்’ மற்றும் ‘பாலியல் துன்புறுத்தல்’ ஆகிய வார்த்தைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாக கருதப்படும், அவை நாடாளுமன்றப் பதிவின் பகுதியாக சேர்க்கப்படாது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது பேசப்படும் சில முக்கிய வார்த்தைகள் மற்ற வெளிப்பாடுகளுடன் இணைத்து வாசிக்கப்பட்டாலன்றி அவை நாடாளுமன்றத்திற்கு புறம்பானதாக காணப்படாது என்று இந்த பட்டியல் கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“