சென்னை -க்கு வந்த குட்டி SpaceX.. இனி ஒவ்வொரு மாதமும் வான வேடிக்கை தான்..!

உலகளவில் பல துறைகள் புதிதாக வளர்ச்சி அடைந்து வருகிறது, அதில் குறிப்பாக விண்வெளி பயணம், ராக்கெட் தயாரிப்பு போன்ற துறைகளில் அரசு நிறுவனங்களைத் தாண்டி தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உருவாகி புதிய பாதையை உருவாக்கியுள்ளது.

அப்படி இந்தியாவில் உருவான ஒரு நிறுவனம் தான் அக்னிகுல் காஸ்மோஸ். இன்று கம்யூனிகேஷன் மற்றும் இண்டர்நெட் சேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்து வருகிறது.

முத்தான இந்த 3 பங்குகளை வாங்கி போடுங்க.. 3 மாதத்தில் நல்ல லாபம் காணலாம்!

இந்தத் தேவைக்கும், சேவைக்கும் மத்தியில் விலை என்ற ஒரு பெரும் பகுதி உள்ளது, இதை அடிப்படையாக வைத்து புதிய வர்த்தக வாய்ப்பை அக்னிகுல் வருகிறது.

அக்னிகுல் காஸ்மோஸ்

அக்னிகுல் காஸ்மோஸ்

அக்னிகுல் காஸ்மோஸ், சென்னையில் ராக்கெட் என்ஜின்களை உருவாக்குவதற்காகப் பிரத்தியேகமாக நாட்டின் முதல் தனியார் தொழிற்சாலையைப் புதன்கிழமை திறந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையை டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் இஸ்ரோவின் தலைவரும் விண்வெளித் துறை செயலாளருமான எஸ் சோமநாத் ஆகியோர் திறந்து வைத்தனர்.

 சென்னை தொழிற்சாலை

சென்னை தொழிற்சாலை

அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 3டி பிரின்டிங் வாயிலாக விண்வெளிக்கு பயணிக்கும் ராக்கெட் என்ஜின்களை உருவாக்க உள்ளது.

ராக்கெட் இன்ஜின்
 

ராக்கெட் இன்ஜின்

இது மட்டும் அல்லாமல் இந்தப் பிரத்தியேக மற்றும் சொந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் ராக்கெட் இன்ஜின்களை, பிற அமைப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அளிப்பது மட்டும் அல்லாமல், அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் சொந்த ராக்கெட்டுகளுக்கான இன்ஜின்களையும் தயாரிக்கப் பயன்படுத்தும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்

ஸ்ரீநாத் ரவிச்சந்திரன்

அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்ரீநாத் ரவிச்சந்திரன் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் புதிதாக இரண்டு ராக்கெட் என்ஜின்களை உருவாக்கும் திறன் இந்தச் சென்னை தொழிற்சாலைக்கு உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் எட்டு எஞ்சின்களை உற்பத்தி செய்ய முடியும். மேலும் அக்னிபான் (Agnibaan) ஏவுவதற்குத் தேவையான என்ஜின்களுக்கான உற்பத்தியும் ஆண்டின் இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Agnibaan என்றால் என்ன..?

Agnibaan என்றால் என்ன..?

Agnibaan என்பது ISRO அமைப்பு வைத்திருக்கும் எடை குறைவான ராக்கெட்களைக் காட்டிலும், குறைவான எடை மற்றும் அதிகத் திறன் கொண்டது. பொதுவாக இஸ்ரோவின் Small Satellite Launch Vehicle (SSLV) 300 கிலோ பேலோடு கொண்டு செல்லும், ஆனால் Agnibaan வெறும் 100 கிலோ பேலோடு -ஐ low Earth orbits (LEOs)-ல் செயற்கைக்கோள்களை நிறுவும்.

வர்த்தக வாய்ப்பு

வர்த்தக வாய்ப்பு

செயற்கைக்கோள் இணைய ஆப்ரேட்டர்கள், ஸ்பேஸ் சென்சிங், பூமி கண்காணிப்பு தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் low Earth orbits (LEOs)-ல் செயற்கைக்கோள்கள் நிறுவும் வர்த்தகம் அதிகமாகிக் கொண்டு இருக்கும் வேளையில் ஒவ்வொரு முறையும் இஸ்ரோ, ரஷ்ய உதவுவது கடினம், அதேவேளையில் அதிகப்படியான தொகையைச் செலவு செய்ய வேண்டும்.

தனியார் துறை

தனியார் துறை

இதை இடைவெளியை தான் Agnikul Cosmos தனியார் துறையில் புதிய வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இந்த முக்கியமான மற்றும் முக்கியமான பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ராக்கெட் இன்ஜின் தயாரிக்கும் தொழிற்சாலை சென்னையில் வந்துள்ளது ஜாக்பாட் தான்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இதையே தன் செய்கிறது. SpaceX நிறுவனத்தில் Merlin, Kestrel, Draco மற்றும் SuperDraco என்ற 4 இன்ஜின்கள் உள்ளது. இதேபோல் ஆக்னிபான் போலவே ஸ்பேஸ் எக்ஸ் Falcon 9 மற்றும் Falcon Heavy போன்ற இரு லான்ச் வெஹிகல் வைத்துள்ளது.

ஆனால் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தை ஒப்பிடும் போது திறன், எடை, தொலைவு என அனைத்திலும் SpaceX பல மடங்கு அதிகம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Agnikul Cosmos: Chennai gets India’s first private rocket engine factory

Agnikul Cosmos: Chennai gets India’s first private rocket engine factory சென்னைக்கு வந்த குட்டி SpaceX.. இனி ஒவ்வொரு மாதமும் வான வேடிக்கை தான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.