அரசு, தனியார் ஊழியர்கள் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் ஐடியா

PF என்று கூறப்படும் பிராவிடண்ட் பண்ட் முறையை ஒரு ஊழியர் ஆரம்ப காலத்திலிருந்து ஒழுங்காக கடைபிடித்து வந்தால் அவரது ஓய்வு காலத்தில் அவருக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியார் நிறுவனத்திலோ அல்லது அரசு நிறுவனத்திலோ 21 வயதில் பணியை ஆரம்பிக்கும் ஒருவர் பிராவிடண்ட் பண்ட் முறையை சரியாக கடைப்பிடித்து வரவேண்டும்.

இடையில் அவர் அந்த தொகையில் கை வைக்காமல் இருந்தால் அவரது ஓய்வின் போது அவருக்கு ஒரு கோடி அல்லது அதற்கு மேல் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விரிவான விவரங்களை தற்போது பார்ப்போம்.

PF சேமிப்பு மூலம் ரூ.1 கோடி

21 வயதில் மாத அடிப்படை சம்பளம் ரூ. 25,000 என பணிபுரியத் தொடங்கும் தனிநபர், PF சேமிப்பு மூலம் ரூ.1 கோடிக்கு மேல் ஓய்வு பெறும் காலத்தில் பெறலாம். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்பது தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் உருவாக்க அனுமதிக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) முதலீடு சம்பளம் பெறும் நபர்களுக்கு ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கான சிறந்த திட்டங்களில் ஒன்று.

 வருமான வரி விலக்கு

வருமான வரி விலக்கு

ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரையிலான EPF முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறத் தகுதி பெறும். ஒரு ஊழியர் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பங்களித்தால் முதிர்வுத் தொகைக்கும் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சம்பளத்தில் பிடித்தம்
 

சம்பளத்தில் பிடித்தம்

தற்போதுள்ள EPFO ​​விதிமுறைகளின்படி, ஊழியர் மற்றும் முதலாளி ஆகியோர் EPFக்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் (DA) 12 சதவீதத்தை பங்களிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் பணியாளரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாக குட்டி போட்டு ஓய்வு பெறும்போது மிகப்பெரிய தொகையாக திரும்ப ஊழியர்களுக்கு கிடைக்கின்றது.

முதலாளியின் பங்களிப்பு

முதலாளியின் பங்களிப்பு

முதலாளியின் பங்களிப்பிலிருந்து, 8.33 சதவிகிதம் ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் 3.67% மட்டுமே EPF முதலீட்டிற்குச் செல்லும்.

ரூ.1 கோடிக்கும் மேல்

ரூ.1 கோடிக்கும் மேல்

2022-23 நிதியாண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.1 சதவீதமாக அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. உங்கள் EPF கணக்கிலிருந்து தற்போதைய வட்டி விகிதத்தில் நீங்கள் ஒருபோதும் பணத்தை எடுக்கவில்லை என்றால், உங்கள் வருங்கால வைப்பு நிதியில் ஒரு கோடிக்கு மேல் கையில் பெற்று கொண்டு நீங்கள் ஓய்வு பெறலாம்.

 ரூ.6 கோடி வரை கிடைக்க வாய்ப்பு

ரூ.6 கோடி வரை கிடைக்க வாய்ப்பு

உங்களின் ஓய்வு வயது 60 ஆக இருந்தால், 39 வருடங்கள் EPF முதலீட்டில் செய்கிறீர்கள். தற்போதைய 8.1 சதவீத வட்டி விகிதத்தில், உங்களின் ஓய்வூதிய நேரத்தில் அது ரூ.1.35 கோடிக்கு மேல் வளரும். உங்கள் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5 சதவீதம் அதிகரித்தால், உங்களின் ஓய்வூதியத் தொகை ரூ. 2.54 கோடியாக உயரும். உங்கள் சம்பளத்தில் 10 சதவீத வருடாந்திர அதிகரித்தால் ரூ.6 கோடிக்கும் அதிகமான EPF பணத்துடன் நீங்கள் ஓய்வு பெறலாம்.

தனியார் ஊழியர்கள்

தனியார் ஊழியர்கள்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களை வழக்கமான முதலீடுகளுடன் ஓய்வூதிய சேமிப்பை உருவாக்க அனுமதிக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) முதலீடு சம்பளம் பெறும் தனியார் ஊழியர்களுக்கு ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கான சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Here is How Your Provident Fund Investment Can Make you one crore

Here is How Your Provident Fund Investment Can Make you one crore | அரசு, தனியார் ஊழியர்கள் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் ஐடியா

Story first published: Thursday, July 14, 2022, 7:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.