4000 கோடி ரூபாய் கடன் வாங்கி சென்னை நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? 4 பேர் கைது!

சென்னையைச் சேர்ந்த நிறுவனம் சுமார் 4,000 கோடி கடன் வாங்கி சட்டவிரோத பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஒன்று ஐடிபிஐ வங்கியில் சுமார் 4000 கோடி கடன் வாங்கியது.

இந்த கடனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியது மட்டுமின்றி சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து நான்கு பேரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை சுரானா குழுமம்

சென்னையை சேர்ந்த சுரானா குழுமம் என்ற நிறுவனம் தங்க நகை தயாரிப்பு மற்றும் விற்பனையில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. தினேஷ் சந்த் சுரானா, விஜய் ராஜ் சுரானா ஆகிய இருவரும் இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். இவர்களுக்கு மேலும் சில நிறுவனங்களும் உள்ளன என்றும், அதற்கும் இயக்குனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலி நிறுவனங்கள்

போலி நிறுவனங்கள்

மேலும் சுரானா குழுமத்தின் சார்பில் ஒரு சில போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு இயக்குனர்கள் நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ஐடிபிஐ வங்கியில் சுரானா நிறுவனம் ரூ.3,986 கோடி கடன் பெற்றது. அந்த பணத்தை திருப்பி செலுத்தாமல் புதிதாக தொடங்கிய போலி நிறுவனங்களுக்கு பரிமாற்றம் செய்ததாக தெரிகிறது.

அமலாக்கத்துறை
 

அமலாக்கத்துறை

இதனையடுத்து ஐடிபிஐ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை இதனையடுத்து ஐடிபிஐ வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐடிபிஐ வங்கியில் இருந்து கடனாக பெற்ற பணத்தை போலியாக உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக வெளிவந்த தகவலை அடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் களமிறங்கினர். நடத்தி வருகிறது. இந்த நிலையில் திடீரென இந்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஐடிபிஐ வங்கியில் இருந்து கடனாக பெற்ற பணத்தை போலியாக உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றியதாக வெளி வந்த தகவலை அடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையில் களமிறங்கினார்.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

குறிப்பாக சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளில் போலியாக நிறுவனங்களை தொடங்கி வங்கியில் கடன் வாங்கிய பணத்தை பரிமாற்றம் செய்து உள்ளதை அமலாக்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி அதற்கான ஆதாரங்களைத் திரட்டிய பிறகு சுரானா குழுமத்தின் இயக்குனர்களான தினேஷ் சந்த் சுரானா, விஜய் ராஜ் சுரானா உள்பட 4 பேரை விசாரணைக்கு அழைத்தனர்.

 கைது

கைது

இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி தினேஷ் சந்த் சுரானா, விஜய் ராஜ் சுரானா, ஆனந்த், பிரபாகரன் ஆகிய 4 பேர் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் சட்ட விரோதமாக பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து 4 பேரையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜூலை 26ம் தேதி வரை நான்கு பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Bank Loan Fraud: Chennai based Surana Group directors arrested!

Bank Loan Fraud: Chennai based Surana Group directors arrested! | 4000 கோடி ரூபாய் கடன் வாங்கி சென்னை நிறுவனம் என்ன செய்தது தெரியுமா? 4 பேர் கைது!

Story first published: Friday, July 15, 2022, 8:15 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.