மாலைதீவு அதிசொகுசு ஹோட்டலில் பதுங்கியிருந்த கோட்டாபய – 2 கப்பல்களுடன் பலத்த பாதுகாப்பு



மாலைதீவுக்கு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் தற்போது சிங்கப்பூர் சென்றுள்ளனர்.

அதுவரை மாலைதீவு அரசாங்கத்தின் ஆதரவுடன் அதி சொகுசு ஹோட்டலான Waldorf Astoria Maldives Ithaafushi இல் கோட்டாபய பாதுகாப்பாக தங்கியிருந்தார்.

மாலைதீவின் சக்திவாய்ந்த தொழிலதிபரும், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரின் நெருங்கிய நண்பருமான முகமது அலி ஜானாவுக்கு சொந்தமான ஹோட்டலியே கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருந்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அங்கு தங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதற்கு அந்த ஹோட்டலின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக மாலைதீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஹோட்டல் மாலைதீவில் உள்ள விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஒன்றாகும். அதற்கமைய, அங்கு ஒரு இரவைக் கழிக்க, 5903 முதல் 8760 அமெரிக்க டொலர்கள் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாலைதீவு சபாநாயகரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் நஷீட் நேற்று காலை இந்த ஹோட்டலுக்குச் சென்று ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் பலருடன் அங்கு நீண்ட நேரம் செலவிட்டார் என தெரியவந்துள்ளது.

மிகவும் பாதுகாப்பாக இருந்த கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சவுதி அரேபிய விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக வெலினா சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று வந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மாலைதீவு சபாநாயகர் அப்துல் நஷீட் வருகைத்தந்துள்ள நிலையில் மாலே விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மற்றுமொரு சொகுசு ஹோட்டலுக்கு அவர் வருகைத்தந்துள்ளார்.

அங்கிருந்து இருந்து ஜனாதிபதியும் நஷீட்டும் நேரடியாக விமானத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கோட்டாபய ராஜபக்ஷவும் மற்றவர்களும் பாதுகாப்பாக விமானத்தில் ஏறும் வரை நஷீட் அங்கேயே இருந்தார் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கோட்டபாய ராஜபக்ஷ அங்கு தங்கியிருந்த போது அவர் மற்றும் அவரது குழுவினருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன், மாலைதீவு தேசிய பாதுகாப்பு படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் அவர்களுடன் இணைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.