செஸ் ஒலிம்பியாட் ஜோதி 18-ந் தேதி கர்நாடகம் வருகை

பெங்களூரு,

44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை பிரதமர் மோடி டெல்லியில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி தொடங்கி வைத்தார். இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி நாடு முழுவதும் 75 இடங்களில் சுற்றி சென்னையை அடைய உள்ளது. இந்த நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி வருகிற 18-ந் தேதி கர்நாடகம் வருகிறது.

அன்றைய தினம் காலை 9 மணிக்கு விமானம் மூலம் பெங்களூருவுக்கு வருகிறது. விமான நிலையத்தில் கிராண்ட் மாஸ்டர் ஜி.ஏ.ஸ்டானி, ஜோதியை பெற்று கொள்கிறார். அங்கிருந்து அந்த ஜோதி திறந்த வாகனத்தில் கவர்னர் மாளிகைக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு அந்த ஜோதியை கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெற்று கொள்கிறார்.

அந்த அந்த ஒலிம்பியாட் ஜோதி விதான சவுதாவுக்கு கொண்டு வரப்படுகிறது. அதன் பிறகு அந்த ஜோதி கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 188 ஆண் செஸ் வீரர்கள் குழுவும், 162 பெண் செஸ் வீராங்கனைகள் குழுவும் கலந்து கொள்கின்றன. இந்த போட்டிகள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை மகாபலிபுரத்தில் நடக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.