இதுதான் Couple Goal: 9 ஆண்டுகளுக்கு பிறகு லலித் மோடிக்கு பதிலளித்த சுஷ்மிதா! Viral Post

சமூக வலைதளங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக சுஷ்மிதா சென் – லலித் மோடி பற்றியதாக இருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளின் முதல் சேர்மனும், பிரபல தொழிலதிபரான லலித் குமார் மோடி, முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் வாழ்க்கையில் ஈடுபட்டு வருவதாக ட்விட்டரில் அதிரடியாக அறிவித்து லைம் லைட்டிற்கு வந்திருக்கிறார் லலித் மோடி.

கிரிக்கெட் சூதாட்டம், பண மோசடி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க தனக்கு இந்தியாவில் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி லண்டனில் தஞ்சமடைந்தவர் லலித் குமார் மோடி.

1994ம் ஆண்டில் உலக அழகியாக தேர்வாகி இந்திய சினிமாவில் முக்கியமான ஹீரோயினாக வலம் வருபவர் சுஷ்மிதா சென். மாடல் உலகின் பிரபலமான ரோஹ்மன் ஷாவ்லுடன் நீண்ட நாள் காதல் உறவில் இருந்து கடந்த ஆண்டுதான் இருவரும் பரஸ்பரமாக பிரிந்தார்கள். சுஷ்மிதா இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

தற்போது விஷயம் என்னவென்றால், நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்டு வந்த சுஷ்மிதாவும், லலித் மோடியும் அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறார்கள். இதுதொடர்பான லலித் மோடியின் ட்வீட்டில், “மாலத்தீவு, சார்தானியா உள்ளிட்ட பல இடங்களுக்கு உலகச் சுற்றுலா சென்றுவிட்டு இப்போதுதான் லண்டனுக்கு திரும்பியிருக்கிறோம். ஒருவழியாக புது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறோம். இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். கல்யாணம் செய்துக்கொள்ளவில்லை. ஆனால், அதுவும் நடக்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

லலித்தின் இந்த ட்வீட் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு லலித் மற்றும் சுஷ்மிதா இடையே நடந்த ட்விட்டர் பதிவு நெட்டிசன்களின் கண்ணில் பட்டு அதுவும் தற்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.

2013ம் ஆண்டு நடந்த அந்த ட்விட்டர் கான்வெர்சேஷனில், “வாக்குறுதிகள் மீறப்பட்டாலும், கடமைகள் மதிக்கப்படுகின்றன.” எனக்குறிப்பிட்டிருந்தார் லலித் மோடி. மேலும் என்னுடைய SMSக்கு பதிலளிக்கும்படியும் சுஷ்மிதாவிடம் லலித் கேட்டிருந்தார்.

அந்த ட்வீட்டர் பதிவை கண்ட நெட்டிசன்கள், 9 ஆண்டுகள் கழித்து சுஷ்மிதா பதிலளித்திருக்கிறார் என்றும், நல்ல விஷயங்களுக்கு காலம் எடுக்கும் என்றும் இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.