பிரதாப் போத்தன்: `மூடுபனி' நாயகன்; `வெற்றி விழா' இயக்குநர் – உடல் நலக் குறைவால் காலமானார்!

தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் இயக்குநராகவும் நடிகராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் தனது 70வது வயதில் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். கேரளாவைச் சேர்ந்த இவர், இயக்குநர் பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி ‘மூடுபனி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்து 80’ஸ், 90’ஸ் தமிழ் ரசிகர்களிடம் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர். ஆங்கில நாவல்கள் வாசிப்பின் மீது காதல் கொண்ட பிரதாப், பின்னர் எழுத்தாளாராகவும் இயக்குநராகவும் பணியாற்றத் தொடங்கினர்.

பிரதாப் போத்தன்

1989-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் கமல், பிரபு, குஷ்பூ, அமலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘வெற்றி விழா’ படம் 175 நாள்கள் வெற்றிகரமாக ஓடி, படத்தின் பெயருக்கு ஏற்ப வெற்றி வாகை சூடியது. அதைத்தொடர்ந்து ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘ஜீவா’, ‘லக்கிமேன்’, ‘ஒரு யாத்ரா மொழி’ போன்ற படங்களை இயக்கினார். பின்னர் தமிழ், மலையாளம், இந்தி எனப் பல்வேறு மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இதற்கிடையே கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். சமீபகலாமா உடல் நலக் குறைவால் சினிமா தொலைக்காட்சி போன்றவற்றில் பணியாற்றாமல் ஓய்வு எடுத்த வந்த பிரதாப் போத்தன், தனது 70வது வயதில் இன்று காலமானார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.