ஜனாதிபதி பதவியிலிருந்து திரு கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா செய்துள்ளதை அறிவிப்பதற்காக , நாளை (16) பாராளுமன்றம் கூடும் என்று சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன இன்று (15) அறிவித்தார்.
ஜனாதிபதி திரு கோட்டாபய ராஜபக்சவின் ,ராஜினாமா ஜூலை 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என சபாநாயகர் மேலும் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ச ராஜினாமா தொடர்பாக அறிவிப்பதற்காக இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ,புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான அரசியலமைப்புச் செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதுவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றும் ஜனாதிபதியாகத் தொடர்வார் எனவும் சபாநாயகர் அறிவித்தார்.
இதன்படி 1981 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் இலக்கம் 2 மற்றும் அரசியலமைப்பின் 40 ஆவது சரத்து பிரகாரம் ஜனாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மஷிந்த யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.