Twitter: ட்விட்டரில் ஏற்பட்ட தடங்கல் – உலகளவில் பயனர்கள் அவதி!

Twitter Technical glitch: மைக்ரோ பிளாக்கிங் சமூக வலைதளமான ட்விட்டரின் சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து பல பயனர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Nothing Phone Issue: நத்திங் போனில் இப்படி ஒரு சிக்கலா? பரிதவிக்கும் வாடிக்கையாளர்!

ட்விட்டரை அணுகுவதில் சிக்கல் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ட்வீட்களை பார்ப்பதில் கூட சிரமப்படுவதாக பலர் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து #TwitterDown என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த சேவை குறைபாடு விரைவில் சரிசெய்யப்படும் என ட்விட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் முடக்கம்

தளத்தில் அதிக பிழை காணப்படுவதாக பயனர்கள் ட்விட்டர் சேவை இடைநிறுத்தப்பட்டது குறித்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ட்வீட்களை பார்க்க முடியவில்லை என்று குமுறுகின்றனர்.

ரூ.8,999-க்கு Infinix 32 Y1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி – நம்பமுடியலையா!

அதுமட்டுமில்லாமல், ட்வீட் செய்வதிலும் சிக்கல் உள்ளது. அதாவது, சில பயனர்கள், தாங்கள் ட்விட்டரை பயன்படுத்துபோது, அது தானாக வெளியேறுகிறது என்றும் புகாரை பதிவிட்டு வருகின்றனர்.

Elon Musk: வெடித்து சிதறிய ராக்கெட் – SpaceX திட்டத்தில் பின்னடைவு! வைரலாகும் வீடியோ…

சர்வர்கள் குறித்த தகவல்களை வழங்கும் இணையதளமான டவுன்டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ட்விட்டரின் சேவை செயலிழந்துள்ளதாக ஆயிரக்கணக்கானோர் தெரிவித்துள்ளனர். பயனர்கள் ட்விட்டரைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.4,389 வரி ஏய்ப்பு செய்ததாக Oppo India மீது குற்றச்சாட்டு – தொடர்ந்து சிக்கும் சீன நிறுவனங்கள்!

இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, சேவை முடக்கத்திற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், விரைவில் தொழில்நுட்ப கோளாறுகள் களையப்பட்டு, அனைவருக்கும் சேவை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டில் இது இரண்டாவது முறை

முன்னதாக, பிப்ரவரி 2022-இல், ட்விட்டரின் சேவையில் வாரத்திற்கு இரண்டு முறை தடங்கல் ஏற்பட்டது. பல பயனர்கள் ட்விட்டரைப் பயன்படுத்துவதில் சிரமப்பட்டனர். ட்விட்டர் பக்கத்தை அவர்களால் அணுக முடியவில்லை.

James Webb Space Telescope: நீங்க இப்டி ஒரு விண்வெளி புகைப்படத்தை பாத்திருக்க வாய்ப்பில்ல!

மேலும், மறுபடியும் முயற்சிக்கவும் என்ற செய்தி மட்டுமே திரும்ப திரும்ப திரையில் காண்பிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதே பயனர்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.