வேற லெவலில் இந்திய விளம்பர சந்தை… ரூ. 88,639 கோடி வருமானம்!

ஒரு பொருள் தரமானதாக இருந்தால் கூட அது நுகர்வோரை சென்றடைய கண்டிப்பாக விளம்பரம் தேவை என்ற நிலை தற்போது உள்ளது.

இதனால் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி மற்றும் டிஜிட்டலில் வரும் விளம்பரங்களை பார்த்து தான் பலர் ஒரு பொருளை வாங்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்திய விளம்பர சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும் உலக அளவில் இந்திய விளம்பர சந்தையின் வளர்ச்சி பிரமிப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விளம்பர சந்தை

2002ஆம் ஆண்டில் மட்டும் இந்திய விளம்பர சந்தை கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் அதிகரித்து 11.1பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் என்பது ரூ.88,639 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

டிவி-டிஜிட்டல்

டிவி-டிஜிட்டல்

உலக அளவில் இந்திய விளம்பர சந்தை மிக வேகமாக வளர்ந்து வருவதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. விளம்பர சந்தையை பொருத்தவரை டிவி மற்றும் டிஜிட்டல் ஆகிய இரண்டுக்கு மட்டுமே பல்வேறு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு டிவி விளம்பர வருமானம் 14.5 சதவீதமும், டிஜிட்டல் விளம்பர வருமானம் 31.6 சதவீதமும் வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதிக விளம்பரங்கள்
 

அதிக விளம்பரங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் தற்போது நுகர்வோர்கள் அதிகளவு பொருட்களை வாங்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்றும், எனவே அனைத்து நிறுவனங்களும், தொலைக்காட்சிகளிலும் டிஜிட்டலிலும் ஏராளமாக விளம்பரங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐபிஎல்

ஐபிஎல்

2022ஆம் ஆண்டு டிஜிட்டல் விளம்பர சந்தை 34 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் 2022ஆம் ஆண்டில் டிவியில் 42.8 சதவீதம் விளம்பரத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெற்ற போது விளம்பர வருமானம் மிகப்பெரிய அளவில் உயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா முதலிடம்

அமெரிக்கா முதலிடம்

2022 ஆம் ஆண்டில், அமெரிக்கா 329.6 பில்லியன் அமெரிக்க டாலர்களில் விளம்பர செலவினங்களில் முதலிடம் வகிக்கிறது. இருப்பினும் வளர்ச்சியை பொருத்தவரை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா 16.0 சதவீதம் வளர்ச்சியும், அமெரிக்கா 12.8 சதவீதம் வளர்ச்சியும், பிரேசில் 9.0 சதவீதம் வளர்ச்சியும் அடைந்துள்ளது என dentsu Global Ad Spend தெரிவித்துள்ளது.

ஆன்லைன் கேமிங்

ஆன்லைன் கேமிங்

ஓடிடி உடன் இணைக்கப்பட்ட டிவியில் ஆன்லைன் கேமிங் மற்றும் இகாமர்ஸ் ஆகியவற்றின் விளம்பரங்கள் அதிகமாக உள்ளது. மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டு விளம்பரம் செய்வதால் இந்திய விளம்பர சந்தை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது.

விளம்பர வருமானம்

விளம்பர வருமானம்

2021 ஆம் ஆண்டில் இந்திய விளம்பர சந்தை சுமார் 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் 16 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 11.1 அமெரிக்க டாலராக வளர்ச்சி அடைந்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 15.2 சதவீதமாக அதிகரித்து 12.8 பில்லியன் டாலர்களாகவும், 2024 ஆம் ஆண்டில் 15.7 சதவீதமாக அதிகரித்து 14.8 பில்லியன் டாலராகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீன விளம்பர சந்தை

சீன விளம்பர சந்தை

உலகளவில், விளம்பரச் செலவு 2022ஆம் ஆண்டு 8.7 சதவீதம் அதிகரித்து 738.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஆசியா பசிபிக் நாடுகளின் விளம்பரச் செலவுகள் 250 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,. குறிப்பாக சீனாவின் விளம்பரச் சந்தை 2022ஆம் ஆண்டில் 5.6 சதவீதம் அதிகரித்து 130.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

India ad market to grow by Rs.88,639 crores in 2022!

India ad market to grow by Rs.88,639 crores in 2022! | வேற லெவலில் இந்திய விளம்பர சந்தை… ரூ. 88,639 கோடி வருமானம்!

Story first published: Friday, July 15, 2022, 10:40 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.