Emergency : கங்கனா ரணாவத் முதல் சுசித்ரா சென் வரை – இந்திரா காந்தியாக நடித்த நாயகிகள்!

எமெர்ஜென்சி படத்தில் இந்திரா காந்தியாக நடிக்கிறார் கங்கனா ரணாவத். நேற்று அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தார். போஸ்டரில் இந்திரா காந்தி தோற்றத்தில் இருக்கும் கங்கனாவை பலரும் பராட்டி வருகின்றனர்.

கங்கனா ரணாவத் மட்டுமல்லாது திரையில் இந்திரா காந்தியைப் பிரதிபலித்த வேறு சில நடிகைகளைப் பார்ப்போம்.

குல்சாரின் ஆரம்பத் திரைப்படமான ஆன்தியில் (Aandhi) , சுசித்ரா சென் என்னும் நடிகை இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஆர்த்தி என்ற அரசியல்வாதியாக தனது நடிப்புத் திறனை பலரும் பாராட்டும் வகையில் வெகுவாக வெளிபடுத்திருக்கிறார்.

பின், எமர்ஜென்சி எனும் தடை குறித்து பெரும் விமர்சனத்திற்கும் சர்ச்சைக்கும் உள்ளான சல்மான் ருஷ்டி எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு, தீபா மேத்தா இயக்கிய திரைப்படத்தில் இந்திரா காந்தியாக சரிதா சவுத்ரி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மதுர் பண்டார்கரின் அரசியல் நாடகமான இந்து சர்க்கரில் சுப்ரியா வினோத் கண்டிப்பான பிரதம மந்திரி வேடத்தில் நடித்திருக்கிறார்.என்.டி.ராமராவ் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட, இரண்டு தெலுங்கு பயோபிக் படங்களில் சுப்ரியா வினோத் இந்திரா காந்தி கதாபாத்திரத்தையே ஏற்று நடித்திருப்பார் .

அதிகம் பாராட்டப்பட்ட பால் தாக்கரேயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இந்திரா காந்தியாக நடித்திருக்கும் அவந்திகா அகர்கருக்கும், மறைந்த பிரதமர் இந்திரா காந்திக்கும் இடையேயான உருவ ஒற்றுமை மக்களிடையே அதிகம் பேசப்பட்டது

கங்கனா ரணாவத் நடிப்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவியில், இந்திரா காந்தி ரோலை ஃப்ளோரா ஜேக்கப் சிறப்பாக நடித்திருப்பார்.

அதன் பின் ஓமுங் குமார் இயக்கத்தில் வெளியாகிய நரேந்திர மோடியின் பயோபிக் படத்தில் கிஷோரி ஷஹானே முன்னாள் பிரதமராக ஒரு மறக்கமுடியாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அக்‌ஷய குமாரின் பெல் பாட்டம் படத்தில் இந்திரா காந்தியாக நடித்த லாரா தத்தாவின் நடிப்பு மறக்கமுடியாத ஒன்று. நேர்த்தியான புடவை, பொருத்தமான விக் என இவரது கெட்டப் அனைவராலும் பேசப்பட்டது.

அஜய் தேவ்கன் நடித்த ‘The Pride of a Nation ‘ எனும் படத்தில் மிகக் குறுகிய நேரத்தில் வந்திருந்தாலும் இந்திராவாக சிறப்பாக நடித்திருப்பார் நவ்னி பரிஹார்.இந்நடிகைகள் அனைவருமே இந்திரா காந்தியாக தங்களது நடிப்பு திறனையும் வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.