ரஷ்யா – உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உலக நாடுகளில் எந்த அளவிற்கு ஆதிக்கும் செலுத்துகிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் நம்பி தான் மொத்த பொருளாதாரமும் உள்ளது. சமீபத்தில் ரஷ்யா தனது நார்டு ஸ்ட்ரீம் பைப்லைன்-ஐ பராமரிப்பு பணிகளுக்காக 10 நாடுகள் மூடக்குவதாக அறிவித்த நிலையில் ஜெர்மனி நாட்டு மக்கள் சுடு தண்ணீர் கூடக் குறைவாகத் தான் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஷ்யா தனது ஆதிக்கத்தை இனி வரும் நாட்களிலும் உறுதி செய்யும் வகையில் புதிய முயற்சியை எடுக்கத் திட்டமிட்டு உள்ளது.
விளாடிமிர் புதினின் புதிய ஆயுதம்.. நடுங்கும் ஐரோப்பா.. அமெரிக்கா வருமா..?!
பென்ச்மார்க் ஆயில் இன்டெக்ஸ்
அமெரிக்கா, பிரிட்டன், சவுதி, ஐக்கிய அரபு நாடுகளின் கச்சா எண்ணெய்க்குத் தனித்தனியாக எண்ணெய் குறியீடு வைத்திருப்பது போல ரஷ்யாவும் தனது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு பென்ச்மார்க் ஆயில் இன்டெக்ஸ் உருவாக்க திட்டமிட்டு உள்ளது.
விளாடிமிர் புடின்
இந்த இன்டெக்ஸ் உருவாக்குவதன் மூலம் உலக நாடுகளின் தடைகளின் பாதிப்புகளில் இருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் ரஷ்ய எண்ணெய் விலையின் மீது இருக்கும் கட்டுப்பாடுகளையும் நீக்க முடியும் என விளாடிமிர் புடின் தலைமையிலான அரசு நம்புகிறது.
ரஷ்யா
ரஷ்ய அரசு அதிகாரிகள், எண்ணெய் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், மத்திய வங்கி ஆகியவை இணைந்து ரஷ்யாவுக்கான தேசிய எண்ணெய் வர்த்தகத் தளத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது பற்றிய ஆலோசனை செய்யத் துவங்கியுள்ளனர்.
WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய்
இந்தத் தளத்தில் மூலம் ரஷ்யா கச்சா எண்ணெய்யை வாங்க விரும்புவோர் நேரடியாக அணுக முடிவது மட்டும் அல்லாமல் WTI மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய்க்கு இணையாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யும் சர்வதேச சந்தையில் உயரும்.
10 வருட முயற்சி தோல்வி
ரஷ்யா அரசு தனது கச்சா எண்ணெய்-க்கான பென்ச்மார்க் குறியீட்டை உருவாக்க கடந்த 10 வருடமாக முயற்சி செய்து தோல்வி அடைந்துள்ளது. ஆனால் உக்ரைன் போருக்கு பின்பு ரஷ்யா எதிர்கொள்ளும் சர்வதேச தடைகள் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்களே தற்போது பென்ச்மார்க் குறியீட்டை உருவாக்க ஆர்வம் காட்டி வருகிறது.
பல பிரச்சனைகள்
இவை அனைத்திற்கும் மேலாக ரஷ்யா தனது பென்ச்மார்க் இன்டெக்ஸ் மற்றும் எண்ணெய் வர்த்தகத் தளத்தை உருவாக்கிய பின்பு ஒரு பேரல்-ஐ 40 -60 டாலர் விலையில் பட்டியலிடலாம் எனத் திட்டமிட்டு வருகிறது. ரஷ்யா விலையைக் குறைப்பது மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களைப் பெற்றாலும் பல பிரச்சனைகள் உள்ளது என ரஷ்ய சந்தை வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
சுடுதண்ணி கூட வாங்க முடியாத மக்கள்.. ஜெர்மனி-க்கு இப்படியொரு நிலைமையா..?!
Russia’s Vladimir Putin Govt plans to launch a national oil trading platform to counter USA, UK sanctions
Russia’s Vladimir Putin Govt plans to launch a national oil trading platform to counter USA, UK sanctions அமெரிக்க, பிரிட்டன் நாடுகளை ஓரம்கட்ட ரஷ்யா புதிய திட்டம்.. இனி நாங்களும் பட்டியலிடுவோம்..!