இளைஞரின் கட்டளைக்கேற்ப செயல்படும் சேவல்.. வைரலான வீடியோவால் ஜாக்பாட்அடித்த சினிமா வாய்ப்பு

கேரளாவில் உரிமையாளரின் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் சேவல் கோழி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு ராமநாட்டின்கரை பகுதியை சேர்ந்தவர் நவநீதன். பள்ளி மாணவரான இவர் கழிந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சாலை ஓரம் விற்பனை செய்யப்பட்ட ஒயிட் லக்கான் வகை சேவல் கோழி குஞ்சு ஒன்றை வாங்கி சிவராமன் என்று பெயரிட்டு வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.  நான்கரை மாத குஞ்சு கோழியாக இருந்த சிவராமன் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை கண்ட நவநீதன் அதற்கு பல பயிற்ச்சிகள் கொடுத்து பழக்கியும் உள்ளார்.
image
இந்த நிலையில் தான் சிவராமன் கோழி உரிமையாளர் நவநீதன் கட்டளைக்கு கட்டுப்பட்டு கூவுவது சைக்கிள் பைக்கில் ஏறி உரிமையாளருடன் சுற்று வருவது போன்ற செயல்களை கட்டளைக்கு இணங்க செய்து வருகிறது. இதை கண்ட ஒரு மலையாள படக்குழுவினரும் சிவராமன் கோழியை  படத்திலும் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. 
இதனால் நாயகனாக மாறிய இந்த சிவராமன் கோழியின் செயல்பாடுகளை நவநீதனின் நண்பர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றிய நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. சிவராமன் கோழிக்கு பல குறும்பட வாய்ப்புகளும் வந்து நவநீதனின் வாயில் கதவை தட்டியுள்ளது என்பது கூடுதல் தகவல்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.