மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் நாளை வரை கனமழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி வரை மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.