‘மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல’ என மோடி, ஹிட்லர் முகத்தை இணைத்து மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் என புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி மிகப் பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் மதுரை கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் போஸ்டர் ஒன்று அடிக்கப்பட்டுள்ளது.
அதில், “நாடாளுமன்ற அவைகளில் ஊழல், நாடகம், திறமையற்றவர், சர்வாதிகாரி, வெட்கக்கேடு, துரோகம் உள்ளிட்ட வார்த்தைகளை பேச தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது எம்பிக்கள் பேச்சுரிமையை மறுக்கும் நடவடிக்கை. மக்கள் நீதி மய்யம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. மிஸ்டர் ஹிட்லர் இது ஜெர்மனி அல்ல, மன்னராட்சி முறையை கொண்டுவரத் துடிக்கிறீர்களோ? “என்று கூறி அருகில் ஹிட்லர், மோடியின் முகத்தை இணைத்தவாறு போஸ்டர்களை அடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டி உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM