இன்றைக்கு தொலைக்காட்சி, மொபைல் போன் இல்லாத வீடுகளே இல்லை. மக்கள் இவைகளை பொழுதுபோக்குக்காக பயன்படுத்துகிறார்கள். இதே தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்கள் ஆகியவைகளை பயன்படுத்தி விவசாயத்தில் வெற்றிபெறலாம்.
இதற்கான மந்திரத்தை சொல்லித் தருவதுதான் ‘வெற்றிகரமான விவசாயத்துக்கு வானொலி, டி.வி, பத்திரிக்கை, யூடியூப்… பயன்படுத்தி கொள்வது எப்படி?’ என்னும் நேரலை நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியை பசுமை விகடன் ஏற்பாடு செய்துள்ளது. வேளாண்மை ஆராய்ச்சியாளர், 50 ஆண்டுகளாக கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர் மற்றும் அகில இந்திய வானொலியின் முன்னாள் பண்ணை இல்ல ஒலிபரப்பு அலுவலர் தே.ஞானசூரிய பகவான் (சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்) உரை நிகழ்த்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பற்றி
இந்த நிகழ்ச்சியை பற்றி தே.ஞானசூரிய பகவான் சொல்வதைக் கேளுங்கள்…
”நான் கிட்டத்தட்ட 18 வருடங்களாக வானொலியில் பணியாற்றியுள்ளேன். சில தொலைக்காட்சி விவாதங்களிலும் பேச்சாளராக கலந்து கொண்டுள்ளேன். இவை அனைத்திலுமே எனது நோக்கம் கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான். இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக விவசாயம், கிராமப்புற வளர்ச்சி மற்றும் இயற்கை வளங்களை காப்பது பற்றி தான் எனது பேசுப்பொருள் இருக்கும். இதற்கு ஊடகங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி விளக்க உள்ளேன்.
உலக நாடுகளின் ஆண்டு சராசரி மழையின் அளவு 600 மி.மீ. ஆகும். ஆனால் இந்தியாவின் ஆண்டு சராசரி மழையின் அளவு 1200 மி.மீ. ஆகும். உலக நாடுகளை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இந்தியாவில் மழை பொழிகிறது. மேலும் உலகில் அதிகமாக மழை பெய்யக்கூடிய இடமும் இந்தியாவில் தான் உள்ளது. இருந்தும் நீர் இல்லாமை பெரிய பிரச்னையாக விவசாயத்தில் இங்கே உள்ளது. நமது நீர் பிரச்னைக்கு காரணம் மழை பற்றாக்குறையோ, தண்ணீர் பற்றாக்குறையோ கிடையாது. நாம் மழை நீரை சரியாக அறுவடை செய்யாதது தான் காரணம். ஆக, விவசாயத்திற்கு நீர் மிக முக்கியம். அந்த நீரை சேமிப்பது எப்படி? அதை சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? என்பது பற்றி விழிப்புணர்வு தரவுள்ளேன்.
தகவல் தொடர்பு சாதனங்களை விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றிற்கு எப்படி பயன்படுத்துவது என்றும் அதன் மூலம் எப்படி லாபத்தை பெருக்கலாம் என்றும் கூறவுள்ளேன்.
மேலும் நேரலை நிகழ்ச்சியில்…
1. வானொலி, டி.வி, பத்திரிகை, யூடியூப்… போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை விவசாயம், கால்நடை வளர்ப்புக்கு பயன்படுத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
2. லாபகரமான விவசாயம் செய்ய எப்படித் தகவல்களைச் சேகரிப்பது?
3. குறைந்த செலவில் நிறைவான லாபம் பெற உதவும் ஊடகங்கள்!
4. ஊடகம் மூலம் முன்னுக்கு வந்த முன்னோடி விவசாயிகளின் கதை!
இன்னும் பல பல தகவல்கள் பற்றி பேசவுள்ளேன். விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும், விவசாய ஆர்வலர்களும் இந்த நேரலையில் பங்கு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அழைப்புவிடுத்துள்ளார், தே.ஞானசூரிய பகவான்.
நேரலை நிகழ்ச்சி எப்பொழுது?
வரும் ஜூலை 16-ம் தேதி சனிக்கிழமை, மாலை 6 மணி முதல், இரவு 7.30 மணி வரை, ஜூம் மீட் வாயிலாக இந்த நேரலைப் பயிற்சி நடைபெறும்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? வெற்றிகரமான விவசாயத்துக்கு வானொலி, டி.வி, பத்திரிக்கை, யூடியூப்…பயன்படுத்தி கொள்வது எப்படி? நேரலை வகுப்பில் கலந்துக்கொள்ள, https://events.vikatan.com/396-successful-farming-/ என்ற இணைய முகவரியில், ஜூலை 16, 2022 மாலை 4.00 மணிக்குள் பதிவு செய்து, இலவசமாக கலந்து கொள்ளலாம்.
இந்த நேரலை வகுப்பில் கலந்துக்கொண்டு பயன் பெறலாம் வாங்க!