நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைக் தடுக்கும் விதமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மதுபானகடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களில், ‘ஈசி 10’ என்னும் ஸ்டிக்கா் ஒட்டப்பட்டு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடவடிக்கை கொண்டுவரப்பட்டது.
இந்த ஸ்டிக்கா் ஒட்டப்பட்ட மதுபான பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட பிறகு மதுபானக்கடைகளில் ஒப்படைத்து 10 ரூபாயை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறுவதை, நீலகிரி மாவட்டத்தை தொடா்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் வகையில், வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க மதுபானக்கடை நிா்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுபானக்கடை நிர்வாகத்திற்கு மேலும் ஒரு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.