பிரதமர் நரேந்திர மோடியை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியதாக உளவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் உளவுப் பிரிவினர் தனது விசாரணையை துவங்கினர்.
கடந்த 12ஆம் தேதி பீகாருக்கு மோடி சென்ற இருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையில் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷரீஃப் என்ற இடத்தில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடியை தாக்க பயங்கரவாதிகள் 6 & 7 தேதிகளில் சதித்திட்டம் தீட்டியதாக 11ம் தேதி சோதனை நடத்திய போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்போது சில ஆவணங்களும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன. “2047ல் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி இந்தியா” என ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதார் பர்வேஸ், முகமது ஜலாலுதீன் என்ற இரு பயங்கரவாதிகள் அங்கிருந்து கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் இவர்கள் தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது. ‘சிமி’ என்ற மாணவர் அமைப்புடனும் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர் .
புல்வரி ஷரிப் எனும் பகுதியில் இவர்கள் பல இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தரபிரதேசம் மேற்கு வங்கம் கேரளா தமிழகம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து இங்கு தங்கி சிலர் ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாவது குற்றவாளியையும் கைது செய்யும் நடவடிக்கையில் தேசிய புலனாய்வு முகமை இறங்கியுள்ளது. இச்சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.