புதுடெல்லி: IR கன்ட்ரோல் கொண்ட சியோமி ஸ்மார்ட் ஸ்பீக்கர் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
டிஜிட்டல் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனமான சியோமி. இந்நிறுவனம் இப்போது இந்தியாவில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஒன்றை விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள IR டிரான்ஸ்மிட்டர் ஹோம் அப்ளையன்ஸ்களுக்கு வாய்ஸ் ரிமோட் கன்ட்ரோலாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இணைய வழியில் ஆன்லைன் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்கள் மூலம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.5999 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இப்போது இது ரூ.4999-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஸ்பீக்கரில் உள்ள இன்பில்ட் IR (Infrared Rays) டிரான்ஸ்மிட்டர் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் துணை கொண்டு குரல் மூலம் Non-ஸ்மார்ட் டிவைஸ்களையும் கன்ட்ரோல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் கருப்பு வண்ணத்தில் கிடைக்கிறது. இதில் டிஜிட்டல் கடிகாரமும் இடம் பெற்றுள்ளது. இதன் பிரைட்னஸ் லெவல் தானாகவே அட்ஜெஸ்ட் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடலை அலாரமாக வைக்கும் வசதியும் இதில் உள்ளது.