இன்றைய இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஒரு பிரச்சனை, பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) எனப்படும் ஹார்மோன் குறைபாடு.
இந்த குறைபாடு இருப்பவர்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாயே ஏற்படாத சூழல் போன்றவையெல்லாம் காணப்படும்.
இந்த பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு கருப்பையில் பல நீர்க்கட்டிகள் காணப்படுகிறது. இது ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஆண்களுக்கான ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி ஒரு சில உணவுகளை கூட இந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது அவற்றில் தவிர்ப்பது மிகவும் நல்லது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
credit – nutraingredients
- மைதா, சர்க்கரை, பிரெட், நாண், பிஸ்கட், குல்ச்சா, ரீஃபைண்டு ஓட்ஸ் மற்றும் ரீஃபைண்டு கோதுமை.
- கொழுப்புள்ள பால், தயிர், சீஸ் மற்றும் வெண்ணெய்.
- மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், பச்சை வாழைப்பழம்.
- சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு.
- முந்திரி, திராட்சை, பிஸ்தா.
- பாக்கெட் பழ ஜூஸ் (இனிப்பில்லாதது என்ற குறிப்புடன் வந்தாலும்), அனைத்துவகை குளிர் பானங்கள், பஃப், கேக் உள்ளிட்ட பேக்கரி உணவுகள், ஐஸ்க்ரீம், டோநட், ஸ்வீட்ஸ்.
- எண்ணெயில் பொரித்த பஜ்ஜி, போண்டா, சமோசா, சிப்ஸ், முறுக்கு உள்ளிட்டவை.