கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரம் மற்றும் அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று (14) நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் காலம் பிந்திய விதைப்புகளை மேற்கொண்டுள்ள ஏறத்தாழ ஆறாயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு யூரியா உரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக காலம் தாழ்த்தி பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரத்தினை பெற்றுக்கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட மட்டத்திலேயே நடைபெற்றுள்ளது.

இதில் துறைசார்ந்த அதிகாரிகளும் கமக்கார அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.