வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : இணையதள பத்திரிகையாளருக்கு மேலும் ஓர் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. ஆனாலும், இன்னும் இரண்டு வழக்குகளில் அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராயும் ‘ஆல்ட் நியூஸ்’ என்ற இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர். இவர், 2018ல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு மத உணர்வுகளை புண்படுத்துவதாக டில்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். உ.பி.,யில் ஐந்து; டில்லியில் ஒன்று என, முகமது சுபைர் மீது ஒரே குற்றச்சாட்டுக்காக ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் டில்லி போலீஸ் தொடர்ந்த வழக்கிலும் ஜாமின் வழங்கப்பட்டது. இதுவரை நான்கு வழக்குகளில் ஜாமின் பெற்ற நிலையில் இரண்டு வழக்குகளில் முகமது சுபைர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜூன் 27ல் கைது செய்யப்பட்ட சுபைர், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement