பிரித்தானியாவில் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மேலும் ஒரு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என பிரித்தானிய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் வருடாந்தர காய்ச்சலுக்கான தடுப்பூசியும் எடுத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், காப்பக ஊழியர்கள் மட்டுமின்றி கர்ப்பிணிகளும் கட்டாயம் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களை விட இந்த குளிர்கால காய்ச்சல் சீசன் மிக மோசமாக இருக்கும் என்று NHS தலைவர்கள் அஞ்சுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே தனியார் காப்பகங்களில் உள்ள மக்களில் 3.5 மில்லியன் மக்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறிந்த நிலையிலேயே பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் தேவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
மேலும், கடந்த வாரம் வெளியான புள்ளிவிவரத்தின் அடிப்படையில், இங்கிலாந்தில் 19 பேர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 17ல் ஒன்று எனவும் ஸ்காட்லாந்தில் 16ல் ஒன்று எனவும் பதிவாகியுள்ளது.
தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து 200,000 இறப்புச் சான்றிதழ்களில் கொரோனா பாதிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது என்று இந்த வார தொடக்கத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த இறப்புகளில் நான்கில் ஒரு பங்கு கடந்த ஆண்டில் நிகழ்ந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.