எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி அடிப்படை கடன் திட்டங்களின் வட்டி விகிதமான MCLR-ஐ 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இந்த MCLR வட்டி விகிதம் உயர்வு ஜூலை 15-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த முடிவால் ஒரு வருட MCLR கடன் திட்டங்களின் வட்டி விகிதம் 7.40 சதவீதத்திலிருந்து 7.50 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அடிப்படை வட்டி விகிதம் உயர்வு
எஸ்பிஐ வங்கியின் 6 மாத கடன் திட்டங்களின் அடிப்படை வட்டி விகிதம் 7.35 சதவீதத்திலிருந்து 7.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டு வருட கடன் திட்டங்களின் அடிப்படை வட்டி விகிதம் 7.60-ல் இருந்து 7.60 சதவீதமாகவும், 3 வருடத்துக்கு 7.7-ல் இருந்து 7.8 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
உங்களுக்கு என்ன பாதிப்பு?
அடிப்படை வங்கி வட்டி விகிதம் உயர்ந்தால் வாகன கடன், வீட்டுக்கடன், தனிநபர் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் உயரும். எஸ்பிஐ வங்கியில் வாகன கடன் 7.45 சதவீதம் முதல் 8.15 சதவீதமாக உள்ளது. வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதம் 7.55 சதவீதம் முதல் உள்ளது.
MCLR
MCLR வட்டி விகிதம் கீழ் கீழ் வங்கிகள் கடன்கள் வழங்காது. கடன் திட்டங்கள் மீதான தேவையைப் பொருத்து இதை வங்கிகள் மாற்றி அமைக்கும். ஆர்பிஐ வட்டி விகிதத்தை மாற்றி அமைக்கும் போதும் வங்கிகள் MCLR வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும்.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா வங்கி தனது அடிப்படை கடன் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 0.10 முதல் 0.15 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது.
SBI Increased MCLR By 10 Basis Point. How It Will Affect Its Customers?
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள்.. MCLR வட்டி விகிதம் உயர்வு.. உங்களுக்கு என்ன பாதிப்பு? | SBI Increased MCLR By 10 Basis Point. How It Will Affect Its Customers?