ஸ்ரீநகர்:ஜம்மு – காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த பஸ் விபத்தில் அமர்நாத் யாத்திரை வந்த 13 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு – காஷ்மீரின் பஹல்கம் மாவட்டம் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர்.குல்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் அமர்நாத் யாத்ரீகர்கள் வந்த பஸ்கள் விபத்தில் சிக்கின. இதில், 13 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கடந்த 8ம் தேதி மேகவெடிப்பு எனப்படும் பேய்மழை பெய்து, மலைப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.இந்நிலையில், யாத்திரைக்கு விதிக்கப்பட்டு இருந்த தற்காலிக தடை கடந்த 11ம் தேதி விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது மோசமான வானிலை நிலவுவதால் அமர்நாத் குகைக்கோவிலுக்கு செல்ல நேற்று முன்தினம் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
ஸ்ரீநகர்:ஜம்மு – காஷ்மீரில் இரண்டு இடங்களில் நடந்த பஸ் விபத்தில் அமர்நாத் யாத்திரை வந்த 13 பேர் காயம் அடைந்தனர்.ஜம்மு – காஷ்மீரின் பஹல்கம் மாவட்டம் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்