பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் – டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை

பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று டிவிட்டர் நிறுவன சிஇஒக்கு எலான்மஸ்க் எச்சரிக்கை விடுத்த தகவல் வெளியாகி இருக்கிறது.

டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கும் முடிவை எலான் மஸ்க் கடந்த வாரம் கைவிட்டதை அடுத்து, அவருக்கு எதிராக டிவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

அதில், டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவது தொடர்பான நிதி விவரங்கள் குறித்து தங்களது வழக்கறிஞர்கள் எலான் மஸ்கிடம் கேள்வி எழுப்பியதற்கு, இது போன்று கேள்வி கேட்டு சிக்கல் ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று டிவிட்டர் சிஇஒக்கு எலான் மஸ்க் கடந்த ஜூன் 28 ஆம்தேதியே எச்சரிக்கை தகவல் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.