சொகுசு கார் மீதான வரி குறித்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து பிஎம்டபிள்யூ எஸ்5 காரை இறக்குமதி செய்தார். 63 லட்சம் மதிப்புள்ள இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதில் பொதுவாக இறக்குமதி செய்யப்பட்ட மாதத்தில் இருந்து 2 சதவீதம் மட்டுமே அபாராதமாக வசூலிக்க வேண்டும் ஆனால் தற்போது 40 சதவீதம் அபாராம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நடிகர் விஜய் இந்த அபாரா தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில், பிம்டபிள்யூ காருக்காக அபாரத்தொகை 2005-ம் ஆண்டு வசூலிக்க கூடாது என்றும், 2019-ம் ஆண்டு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நுழைவு வரி செலுத்தாத காலத்திற்கு மட்டுமே அபராதம் விதிக்க வேண்டும் என்று வணிக வரித்துறைக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“