நடிகர் ரஜினிகாந்த் செஸ் ஒலிம்பியாட்டின் டீசரை வெளியிட்டார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த மாதம் கையெழுத்தானது, இதனை தொடர்ந்து தலைமைச் செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தத் தொடருக்கான ஜோதி ஏற்றப்பட்டு நாடு முழுவதும் வலம் வரவுள்ளது. இந்த போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இச்சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விளம்பரம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், போட்டிககான டீசரை நடிகர் ரஜினிகாந்த வெளியிட்டுள்ளார். இந்த டீசருக்கு இசையமைப்பாளர் ஏ,ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இதில், முதல்வர் ஸ்டாலின் நடித்துள்ளார்.
#ChessChennai2022 pic.twitter.com/tiZeCN0a5v
— Rajinikanth (@rajinikanth) July 15, 2022