உத்தரபிரதேசத்திற்கு நாளை ஒரு நாள் பயணமாக செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, 14 ஆயிரத்து 850 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புந்தேல்கண்ட் விரைவுச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்த விரைவுச்சாலைக்கு 2020ம் ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆக்ரா – லக்னோ விரைவுச் சாலையுடன் இணையும் 296 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி விரைவுச்சாலை, போக்குவரத்து தொடர்புக்கு பெருமளவு ஊக்கத்தையும், தொழில்துறை வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.