Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. ஒரு சூறாவளியைப் போல இணையத்தை தாக்கி வரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் லட்சக் கணக்கான நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து ஆச்சரியம் அளித்து வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கும் ஒரு சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பார்ப்பவர்களின் முதல் பார்வையில் குழப்பத்தையும் இரண்டாவது பார்வையில் மேலும் குழப்பத்தையும் அளிப்பவை. முடிவில்லா குழப்பத்தை அளித்து இறுதி விடை தெரிந்து தெளியும்போது வியப்பா இருக்கும். அதனால்தான், நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடித்தேடிப் பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், உங்களுடைய ஐக்யூ அளவையும் சொல்கிறது. இந்த சித்திரம் 1872ஆம் ஆண்டிலிருந்து பரவி வாசகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்த படத்தில் 16 விலங்குகள் மறைந்திருக்கிறது. அதை 32 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால். நீங்கள் எத்தனை விலங்குகளை கண்டுபிடிக்கிறீர்களோ அதை வைத்து உங்களுடைய ஐக்யூ அளவை தெரிந்துகொள்ளலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஐக்யூ டெஸ்ட் படமாகவும் இருக்கிறது. இந்த படத்தில், ஒரு நரி தனது மதிய உணவை சாப்பிட விரும்பி மரத்தில் ஏற முயற்சிப்பதை நீங்கள் காணலாம். ஆனால், இந்த படத்தில் பல விலங்குகளைப் பார்க்க முடியும். அதனால், பார்வையாளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இந்த படத்தில் மறைந்துள்ள 16 விலங்குகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். அதுவும் 32 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். இருப்பினும், 129க்கு மேல் IQ லெவல் உள்ளவர்கள் மட்டுமே 32 வினாடிகளுக்குள் 16 விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியும். உங்களுடைய ஐக்யூ லெவல் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.
32 நொடிகளில் 16 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டால் உங்களுக்கு வாழ்த்துக்ள். நீங்கள்தான் ஐக்யூவில் டாப். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய சில குறிப்புகளைத் தருகிறோம்.
இந்த படத்தில் நரி எங்கே பார்க்கிறது என்று பார்ப்பது முதல் குறிப்பு. பறவைகள் மற்றும் குதிரை, ஆட்டுக்குட்டி மற்றும் பறவை போன்ற விலங்குகளும் தற்போது அழிந்து வருகின்றன என்பது உங்களுக்கு இரண்டாவது குறிப்பு. இப்போது படத்தை மீண்டும் ஒரு முறை நன்றாகப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்ல என்றால், பரவாயில்லை. என்னென்ன விலங்குகள் இருக்கிற்து. எங்கே மறைந்திருக்கிறது என்பதை இங்கே தருகிறோம். இந்த படத்தில் இன்னும் ஒரு குதிரையையும் ஆட்டுக்குட்டியையும் பார்க்கலாம். அங்கே ஒரு செம்மறி ஆடு இருக்கிறது. அதை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அடிமரத்தில் ஒரு பன்றி பதுங்கி உள்ளது. இடதுபுறம் உள்ள மரத்தடியில் மூன்று மனித முகங்களும் உள்ளன. நீங்கள் இடதுபுறம் பார்க்கும்போது, வலதுபுறமும் பார்க்க முயற்சிக்கவும். உங்கள் வலதுபுறத்திலும் இரண்டு மனித முகங்கள் உள்ளன. காட்டின் தரையில் இன்னும் சில விலங்கு முகங்கள் உள்ளன. அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கீழே உள்ள பதில்களைப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”